பொங்கலுக்கு வரும் வா வாத்தியார்?.. இயக்குநர் கொடுத்த செம ட்விஸ்ட்.. ஆத்தாடி என்ன இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் விமர்சன ரீதியாக வெகுவாக கொண்டாடப்பட்டது. ஆனால் வணிக ரீதியாக பெரிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. இதற்கிடையே நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் படம் தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்துவிட்டாலும் ரிலீஸாகாமல் தள்ளி தள்ளி போனது. இந்நிலையில் படமானது ஜனவரி 14ஆம் தேதி வரும் என்று அறிவிப்பு வந்திருந்தது.
சூர்யாவின் தம்பியான கார்த்தி கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அடிப்படையில் அவர் உதவி இயக்குநர் என்பதால் அவரது கதை தேர்வு எல்லாம் அபாரமாக இருக்கக்கூடியவை. ஒவ்வொரு படத்துக்கும் வேரியேஷன் காண்பிக்கும் கார்த்தி; கடைசியாக மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். பிரேம்குமார் இயக்கியிருந்த அப்படம் அழகியலின் உச்சம் என பலரால் கொண்டாடப்பட்டாலும்; வணிக ரீதியாக பெரிய எதிர்பார்ப்பை பெறவில்லை என்பது ஏமாற்றமே.
வா வாத்தியார்: இதற்கிடையே நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடிக்க கமிட்டானார் கார்த்தி. சில வருடங்களுக்கு முன்பே அந்தப் படத்தின் பணிகள் எல்லாம் தொடங்கி; முடிந்தும்விட்டன. சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார்கள். முதன்முறையாக நலனுடன் கார்த்தி இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்தது.

தள்ளிப்போன ரிலீஸ்: இப்படி உச்சக்கட்ட ஹைப்புகளை சந்தித்த வா வாத்தியார் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. பல தேதிகள் ரிலீஸ் தேதிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் தீராததால் படம் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கடந்த வருடத்தில் மட்டுமே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு; பிறகு அந்தத் தேதிகளும் இல்லை என்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க பொங்கலுக்கு ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. இதனால் வா வாத்தியார் உள்ளிட்ட படங்களுக்கு நல்லதாக அமைந்துவிட்டது என தெரிகிறது. அதாவது ஜனவரி 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தயாரிப்பாளர் கடன் தொகையை முழுவதுமாக செலுத்தினால்தான் படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் தெரிவித்திருப்பதால் பொங்கலுக்கும் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நலனுக்கும் ரசிகர்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க படம் தாமதமாக வந்தாலும் நல்ல ஹைப் படத்துக்கு இருப்பதால் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என நம்பலாம். முக்கியமாக இப்படத்தின் ஓவர் ஹைப்புக்கு காரணங்களில் ஒருவர் இயக்குநர் நலன் குமாரசாமியும்தான். அவர் இதுவரை இதற்கு முன்பு இரண்டு படங்கள்தான் இயக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் பெரிதாக இருக்கிறது. இந்நிலையில் வா வாத்தியார் பற்றி தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நலன் குமாரசாமியின் படம் என்று கொண்டாடுகிறார்கள் இல்லையா? அவர்களுக்கான படமாக வா வாத்தியார் இருக்காது. அதற்காக ரொம்பவெல்லாம் ஏமாற்றிவிட மாட்டேன். மெனக்கெட்டு நான் வேறு வழியில் ஒன்று செய்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications