'சூது கவ்வும்' இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி, மடோனா வாழ்த்து!
சென்னை: இயக்குநரும் நடிகருமான நலன் குமாரசாமி - சரண்யா திருமணம் நேற்று காலை திருச்சியில் நடந்தது.
சூது கவ்வும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. வித்தியாசமான பட முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். எக்ஸ், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், பீட்சா, ஜிகிர்தண்டா, கட்டப்பாவ காணோம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் பிடெக் பட்டதாரியான வி சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று காலை திருச்சி வாசவி மகாலில் நடந்தது.

இந்தத் திருமணத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் - நடிகர் ரா பார்த்திபன், நடிகர் - இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகை மடோனா செபாஸ்டியன், நடிகர்கள் கருணாகரன், சாந்தனு உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











