விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்.. தனுஷுக்கு பிடிக்கவில்லை.. இயக்குநர் கிளப்பிய பரபரப்பு

சென்னை: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்தார்கள். பிறகு திருமணம் செய்துகொண்ட அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். இரண்டு பேரும் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். மேலும் பிஸ்னெஸிலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்துவருகின்றனர். இந்தச் சூழலில் அவர்கள் குறித்து இயக்குநர் நந்தகுமார் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிம்பு, பிரபுதேவா ஆகிய இரண்டு பேருடனான நயன்தாராவின் காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அவர் சில காலம் சிங்கிளாக இருந்த சூழலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்குமிடையே காதல் மலர்ந்தது. மலர்ந்த காதலை லிவிங் டூ கெதரில் இருந்து வளர்த்தெடுத்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துகொண்ட பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

vignesh shivan dhanush nayanthara

சர்ச்சைகள்: திருமணத்துக்கு பிறகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அதற்கடுத்து எதிலும் சிக்காமல் இருந்த அவர்கள் சமீபத்தில் தனுஷுடன் எழுந்த மோதலில் சர்ச்சையில் சிக்கினார்கள். பிறகு புதுச்சேரி அரசுக்கு சொந்தமான இடத்தை விக்னேஷ் சிவன் விலை பேசியதாக சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று விக்கி விளக்கமளித்தார். அதேபோல் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி நயன்தாரா அடுத்த சிக்கலில் சிக்கினார்.

நந்தகுமார் பேட்டி: இந்நிலையில் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்குவதாக இருந்த இயக்குநர் நந்தகுமார் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், " விக்னேஷ் சிவனை நயன்தாரா பொய் சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் அவருக்கு இல்லை. விக்னேஷ் சிவன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதல் செய்துகொண்டிருந்தார். அதனை அவரே என்னிடம் சொல்லவும் செய்திருக்கிறார்.

மறைத்திருக்கலாம்: ஒருவேளை நயன்தாராவிடம் அந்தக் காதல் விவகாரத்தை விக்னேஷ் சிவன் மறைத்திருக்கலாம். போடா போடி படத்தின் சமயத்தில்தான் விக்னேஷுக்கு அந்தக் காதல் தோல்வி நடந்தது. அதனால்தான் எனக்கு தெரியும். அனைத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்பவர் நயன். தனக்கு யாரையாவது பிடித்துவிட்டால் தன்னை விட்டு அவர் பிரிவதற்கு விரும்பவேமாட்டார். 24 மணி நேரமும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதனால் நயனுடன் வாழ்வது ரொம்பவே கஷ்டம். அனைத்திலும் ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்பார்.

தனுஷுக்கு பிடிக்கவில்லை: பெண்களுக்கு பிடிக்கும் ஒருவரை வேண்டாம் என்று ஒதுக்கிதான் விக்னேஷ் சிவனை அவர் திருமணம் செய்துகொண்டார். விக்கியின் உண்மையான முகம் என்னவென்று தனுஷுக்கு தெரியும். அதனால்தான் விக்னேஷ் சிவனை நயன் திருமணம் செய்துகொண்டது தனுஷுக்கு பிடிக்கவில்லை. நயன் நன்றாக இருக்க வேண்டுமென்றுதான் தனுஷ் நினைத்தார். அவரது பேச்சை கேட்டிருந்தால் நயன் வாழ்க்கை இன்னமும் நன்றாக இருந்திருக்கும். இங்கே எல்லா உறவுகளுமே பிஸ்னெஸ் மைண்டில்தான் போய்க்கொண்டிருக்கிறது. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்லாம் ரொம்பவே சாதாரணம்.

நயனின் ஜாதகத்தை ஒருமுறை நாங்கள் பார்த்தோம். அப்போது அவர் குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு வந்தால் முதலமைச்சராகும் தகுதி இருக்கிறது என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். அவரது ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி மாதிரி இருக்கும் என்றும் சொன்னார்கள்" என்றார். நந்தகுமாரின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X