சிம்பு - நயன்தாரா பிரிய காரணமே ரஜினி தான்.. விக்னேஷ் சிவனின் முதல் காதலி.. இயக்குநர் பேட்டி!

சென்னை: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. இதில், நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயண்படுத்த தனுஷ் என்.ஓ.சி தரவில்லை என்றும் 3 நிமிட காட்சிக்கு 10 கோடி கேட்டதாகவும் நயன்தாரா தனுஷ் மீது குற்றம்சாட்டினார். இவர்களின் பஞ்சாயத்து தற்போது நீதிமன்றம் வரை சென்று இருக்கும் நிலையில், இயக்குநர் நந்தவனம் நந்தக்குமார் யூடியூப் சேனலில் இகுறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

அதில், நானும் ரவுடிதான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முக்கிய காரணமாக இருந்ததே விஜய் சேதுபதி அவர் தான். ஒரு விழாவில், எந்த நடிகையை தூக்குவதற்கு ஆசைபடுவீங்க என்று கேட்டபோது, அவர் நயன்தாராவை தூக்குவதற்கு ஆசைபடுவதாக மேடையில் சொல்லியிருந்தார். இந்த நேரத்துல தனுஷினுடைய தயாரிப்பு கம்பெனி அப்பதான் ஆரம்பிச்சுட்டு இருந்தது. இதனால இவங்க ரெண்டு பேருடைய காம்பினேஷனும் நல்லா இருக்கும் என்று தனுஷ் முடிவு பண்ணித்தான் நானும் ரவுடிதான் படத்தை எடுத்தாரு. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் குறைந்த சம்பளத்தில் தான் ஹீரோ நடிச்சிருந்தாரு.

nayanthara dhanush netflix

விக்னேஷ் சிவனின் காதலி: அதற்கு முன்னாடி வெளியான விஐபி படத்தில் விக்னேஷ் சிவன், கோ டைரக்டரா ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு, அப்போது தான் தனுஷ், விக்னேஷ் சிவனுக்கு இயக்குநராக வாய்ப்பு கொடுத்து. நயன்தாரா, விஜய் சேதுபதி காம்பினேஷன்ல நானும் ரவுடிதான் திரைப்படம் வெளி ஆச்சு. அந்த படத்துல தான், நயன்தாராவை வர்ணிச்சு விக்னேஷ் சிவன் ஒரு பாட்டு எழுதுறாரு, அந்த பாட்டுக்கு பின் தான் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மேல ஒரு காதலே வந்துச்சு. நயன்தாரா பொருத்தவரைக்கும் விக்னேஷ் அவன்கிட்ட அவர், எந்த ஒரு பொய்யையும் சொல்லவே இல்ல, ஆனால், விக்னேஷ் சிவனுக்கு ஒரு காதல் இருந்தது. அந்த காதலை நயன்தாரா கிட்ட விக்னேஷ் சிவன் சொல்லாம மறைத்துவிட்டார்.

திருமணம் நடக்காது என நினைத்தார்: ஆனால், நயன்தாராவும். விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு செல்வார்கள் என்று தனுஷ் அவர்கள் நிச்சயமாக நினைக்கவே இல்லை. ஏனென்றால் விக்னேஷ் சிவனை பற்றி அதிகமாக தெரிந்தவர் தனுஷ் என்பதால் இந்த திருமணம் நடக்காது, நடக்கக் கூடாது என்று நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும், திருமண விஷயத்தில் உறுதியாக இருந்ததால் அவர்களின் திருமணம் நடந்து விட்டது இப்படித்தான் சிம்புவும் நயன்தாராவும் சேரக்கூடாது, சேர்ந்தால் சரியாக இருக்காது என நினைத்ததால் தான் நயன்தாராவை காப்பாற்றும் நோக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் காதலை பிரித்தார். ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா விஷயத்தில் அவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் அவர்களின் திருமணம் நடந்து விட்டது.

nayanthara dhanush netflix

இதுதான் காரணம்: இதுவே நயன்தாராவுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தனுஷ் அவர்கள், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்க மாட்டார். இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியிருப்பார் ஆனால், அவருக்கும் திருமணமாகிவிட்டதால்தான் தனுஷ், இந்த விஷயத்தில் வழக்கு போடும் அளவிற்கு சென்று விட்டார் என்று இயக்குனர் நந்தன் நந்தகுமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X