திரிஷாவின் வீட்டில் விஜய்.. அப்படித்தான் இருந்தாராம்.. புயலை கிளப்பிய இயக்குநர்.. விளாசும் ரசிகர்கள்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக கூறப்படுகிறது. இப்போது அவர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படமானது அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா குறித்து சர்ச்சை ஒன்று எழுந்தது.

கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

GOAT வசூல்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ, GOAT ஆகிய நான்கு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த நான்கு படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன் நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த வருடம் படம் வெளியாகிறது.

Director Nandhu Controversial Speech about Vijay And Trisha
Photo Credit:

ஃபேவரைட் ஜோடி: இதற்கிடையே கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக திகழ்ந்தவர்கள் விஜய்யும், திரிஷாவும். திரையில் அவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதால் ரசிகர்கள் அவர்கள் இணைந்து நடித்த படத்தை கொண்டாடுவார்கள். கடைசியாக இருவரும் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட வருடங்கள் கழித்து அவர்கள் இரண்டு பேரும் இணைந்து லியோவில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் நடனம்: அதேபோல் GOAT படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடினார். பொதுவாக ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா நடனம் ஆடுவது அரிதுதான். ஆனால் விஜய்யுடன் இருக்கும் நட்பு காரணமாக அந்த விஷயத்தை செய்தார். பாடலில் இரண்டு பேருமே நடனத்தில் பட்டையை கிளப்பினார்கள். பலரும் அந்தப் பாடல் வந்த புதிதில் திரிஷா, விஜய் போன்று காஸ்ட்யூம் போட்டுக்கொண்டு ரீல்ஸ் செய்ததும் நினைவுகூரத்தக்கது.

சமீபத்திய சர்ச்சை: சூழல் இப்படி இருக்க நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு இரண்டு பேரும் ஒன்றாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் இப்போது புதிய சர்ச்சையும் எழுந்திருக்கிறது. அதாவது விஜய் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது விஜய்யுடன் தனது வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா வாழ்த்து தெரிவித்தார். அதை வைத்து பலரும் பலவிதமான கதைகளை கட்டினார்கள். திரிஷாவோ அதற்கு தரமான பதிலடியையும் கொடுத்துவிட்டார்.

நந்து பேட்டி: இந்நிலையில் இயக்குநர் நந்து தனியார் யூடியூப் சேனலுக்கு இதுகுறித்து அளித்த பேட்டியில், "விஜய்யும், திரிஷாவும் இருக்கும் புகைப்படத்தில் விஜய்யை மட்டும் Zoom செய்து பாருங்கள். அவர் முழு போதையில் இருப்பது அவருடைய கண்களில் தெரியும். இதனை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் பாருங்கள் விஜய் அதையெல்லாம் மறைக்க கூலிங் கிளாஸ் போட ஆரம்பித்துவிடுவார்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த விஜய் மற்றும் திரிஷாவின் ரசிகர்களோ நீங்கள் அருகில் இருந்து பார்த்தீர்களா என நந்துவை விளாச தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X