தனுஷுக்கு என்ன டேஸ்ட்?.. திருமணம் நோ.. மிருணாளுக்கு ஐஸ்வர்யாகூட வாழலாமே.. எல்லை மீறி பேசிய இயக்குநர்
சென்னை: நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாக கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதுகுறித்து இரண்டு பேரும் இப்போதுவரை மௌனம் காத்துவந்தாலும்; அவர்கள் காதலிப்பது உண்மைதான் என பலரும் உறுதியோடு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் குறித்து இயக்குநர் நந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அதேசமயம் அவரது நடிப்பு பலரிடமும் அப்ளாஸை அள்ளியது. பிச்சைக்காரராக தோன்றி அவர் நடித்ததற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பது அவரின் ரசிகர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. அடுத்ததாக அவர் நடிப்பில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
டைவர்ஸ் செய்த தனுஷ்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். இரண்டு பேரும் நல்லபடியாக வாழ்ந்த நிலையில்; கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களின் மகன்களான யாத்ராவும் லிங்காவும் கோ பேரண்ட்டிங் முறையில் இரண்டு பேரிடமும் வளர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் விஷயத்தில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.

மிருணாளுடன் காதல்?: ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் செய்துவைக்க தந்தை கஸ்தூரி ராஜா முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதற்கு பிறகு அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. சூழல் இப்படி இருக்க நடிகை மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங் செய்துவருவதாகவும்; விரைவில் இவர்களது ரிலேஷன்ஷிப் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மிருணாளின் செயல்: இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராமில் தனுஷின் சகோதரிகளை ஃபாலோ செய்ய ஆரம்பித்தார். அதனை கவனித்த ரசிகர்கள், 'வீட்டில் உள்ளவர்களுடன் பழக ஆரம்பித்திருக்கிறார். அநேகமாக காதல் கான்ஃபார்ம்தான் போல' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் இயக்குநர் நந்து இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கிறார்.
நந்து பேட்டி: தனியார் யூடியூப் சேனலான கிங்வுட்ஸ் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், "தனுஷுக்கு என்ன டேஸ்ட் என்றே தெரியவில்லை. மிருணாள் தாகூரையும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தையும் ஒரே மேடையில் நிறுத்தி வைத்தால் இருவருக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இருக்காது. அவர் மாதிரியேதான் மிருணாள் இருக்கிறார். இவருடன் வாழ்வதற்கு ஐஸ்வர்யாவுடனேயே வாழ்ந்திருக்கலாமே. ஆனால் ஒன்று தனுஷ் யாரையும் திருமணம் செய்யமாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











