Nayanthara: நயன்தாராவோட நிஜ கேரக்டரே வேற.. கெட்டவன் பட இயக்குநர் பகிர்ந்த விஷயம்!
சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் பாலிவுட் என்ட்ரியும் கொடுத்திருந்தார். ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பாலிவுட்டில் என்ட்ரியாக அமைந்தது.
ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தி படங்களில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில படங்கள் நயன்தாராவுக்கு சிறப்பாக கை கொடுக்கவில்லை. அந்த வகையில் அன்னபூரணி உள்ளிட்ட படங்களை சொல்லலாம். ஆனால் அடுத்தடுத்து மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படங்கள் அவருக்கு சிறப்பான கம்பேக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக மாஸ் காட்டி வருபவர். கடந்த ஆண்டில் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவரது பாலிவுட் என்ட்ரி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து நயன்தாராவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து இந்தி படங்களில் இவர் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் அன்னபூரணி, இறைவன் என நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் சொதப்பின.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் தற்போது மண்ணாங்கட்டி, டாக்சிக், ராக்காயி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்கள் இவருக்கு சிறப்பான கம்பேக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் பிசினஸிலும் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடைய குடும்பத்தையும் கேரியரையும் பிசினசையும் சிறப்பாக மெயின்டைன் செய்து வருகிறார். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கெட்டவன் இயக்குநர் பேட்டி: அந்த வகையில் நயன்தாரா குறித்து கெட்டவன் பட இயக்குனர் நந்து தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.நாம் சினிமாவில் பார்க்கும் நயன்தாரா வேறு, நிஜ வாழ்க்கையில் உள்ள நயன்தாரா வேறு என்று அவர் கூறியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் கால் மேல் கால் போட்டு கெத்தாக காணப்படும் நயன்தாராவைதான் நாம் பார்க்க முடியும் என்று கூறியுள்ள நந்து, ஒரு மேன்லி ஆட்டிட்யூட் நயன்தாராவிடம் எப்போதுமே காணப்படும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். ஆனாலும் அவரிடம் திமிரை பார்க்க முடியாது என்று கூறியுள்ள நந்து, அனைவரிடமும் சகஜமாக பேசும் நயன்தாரா, தன்னுடைய கைகளால் சமைத்தெல்லாம் கொடுப்பார் என்று நந்து கூறியுள்ளார்.
டிராப்பான கெட்டவன் படம்: சிம்புவை வைத்து நந்து கெட்டவன் படத்தை துவங்கிய நிலையில், படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. ஆனாலும் இந்தப் படத்தின்போது சிம்புவுக்கும் நந்துவிற்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் டிராப்பானதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று தனது சமீபத்திய பேட்டியில் நந்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











