நயன்தாராதான் விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை பிச்சை போட்டார்.. இயக்குநர் என்ன இப்படி பேசிட்டாரு?

சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் நயன் சமீபத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். இந்நிலையில் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்குவதாக இருந்த இயக்குநர் ஜிடி நந்து நயன்தாரா குறித்தும் விக்னேஷ் சிவன் குறித்தும் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அப்படித்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில்தான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.

nayanthara nandhu vignesh shivan

சூப்பர் திருமணம்: காதலில் இரண்டு பேரும் விழுந்ததை அடுத்து சில வருடங்கள் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்தார்கள். அதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாடகை தாய் மூலம் அந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு இருவம் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள்.

சர்ச்சைகள்: ஆனால் சமீப காலமாக விக்கியும், நயனும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருவது வாடிக்கையாகியிருக்கிறது. முதலில் தனுஷுடன் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்தும், வலைப்பேச்சு குழுவினர் குறித்தும் நயன் பேசியது பெரும் விவாதமானது. இந்நிலையில் சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்குவதாக இருந்த இயக்குநர் நந்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நயன்தாரா குறித்து ஓபனாக பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

நந்து பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சிம்புவை வைத்து நெல்சன் திலீப்குமார் வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் சிம்பு - நயன் காதல் பாதியில் முடிந்தது. வேட்டை மன்னன் படமும் ட்ராப் ஆனது. எனவே சிம்புவை பழிவாங்க நினைத்த நயன்தாரா சில வருடங்கள் கழித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். லைகா நிறுவனத்துக்கோ இந்தப் படத்தை தயாரிப்பதில் விருப்பமே இல்லை.

வாழ்க்கை பிச்சை: இருந்தாலும் படத்தை தயாரித்தார்கள். படம் ஹிட்டானது. இதனால் நெல்சனும் இயக்குநராக மாறினார். அதேபோல் விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை பிச்சை போட்டவர் என்றால் அது நயன்தாராதான். நயனை விக்னேஷ் திருமணம் செய்துகொண்டால்தான் விக்கியின் வாழ்க்கை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது. அதேசமயம் இந்த வாழ்க்கையை நயன் ஏன் கொடுத்தார் என்றால் அது அன்பு மற்றும் காதல் ஆகிய இரண்டால் மட்டும்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X