கடும் குளிர்.. மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்டுக் கொள்ளும் விஜய் ஆண்டனி.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: பிரபல நடிகரான விஜய் ஆண்டனி மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் போட்டோ வைரலாகி வருகிறது.

மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நவீன் முகமதலி. இவர் தற்போது இயக்கி வரும் படம் அக்னி சிறகுகள்.

இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, சென்ட்ராயன், அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, ரைமா சென் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கிறார்.

மேக்கப் மேன்

மேக்கப் மேன்

இப்படத்தின் காட்சிகள் ரஷ்யா, ஸ்வீட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் காட்சியாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநரான நவீன் முகமதலி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனிக்கு மேக்கப் மேன் மேக்கப் போட்டுவிடுவதாக உள்ளது.

மாட்டுத்தொழுவத்தில்

மாட்டுத்தொழுவத்தில்

அருகில் நடிகர் சென்ட்ராயன் நிற்கிறார். இந்த போட்டோவை பகிர்ந்துள்ள இயக்குநர் நவீன் முகமதலி, சுவிச்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர், ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்ததுதான் பெரிய விஷயம் என பதிவிட்டுள்ளார்

ஒன்றுமே இல்லை..

ஒன்றுமே இல்லை..

அவரது இந்த பதிவை பார்த்த நடிகர் விஜய் ஆண்டனி, நவீன் உங்கள் கடின உழைப்புக்கும் உங்கள் அணியின் அர்ப்பணிப்புக்கும் முன்னால் நான் செய்திருப்பது ஒன்றுமே இல்லை.. என்னுடைய சந்தோஷம் என பதில் தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman
இரக்கமுல்ல குணம்

இரக்கமுல்ல குணம்

இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் ஏசுநாதர் பிறந்த இடம் அவ்ளோ கேவலமா என கேட்டு கிளம்பிவிடப் போகிறார்கள் என இயக்குநர் நவீனை எச்சரித்துள்ளனர். மற்றொரு நெட்டிசனான இவர், இதற்காக தான் இவரது ரசிகனாக இருக்கேன்.. இயல்பான மனிதர் இரக்கமுல்ல குணம்.. என புகழந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X