இந்த பெண் மீது இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொந்தளிக்கும் பிரபல இயக்குநர்!

சென்னை: சாதி வெறியுடன் பேசிய நடிகை மீரா மிதுன் மீது ஏன் இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குநர் கொந்தளித்துள்ளார்.

Recommended Video

#BREAKING நடிகை மீரா மிதுன் கைது!

நடிகை மீரா மிதுன் அண்மையில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார்.

மேலும் அந்த குறிப்பிட்ட சாதியினர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்பதால் தான் அனைவரும் அவர்களை தூற்றுகிறார்கள்.

சினிமாவில் இருந்து நீக்க வேண்டும்

சினிமாவில் இருந்து நீக்க வேண்டும்

தமிழ் சினிமாவில் இருந்து அந்த சாதி இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். மீரா மிதுனின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் புகார்

தமிழகம் முழுவதும் புகார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மீரா மிதுன் அளித்த புகாரை தொடர்ந்து அவர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நேற்று போலீஸில் ஆஜராக வேண்டி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பினர்.

என்னை கைது செய்ய முடியாது

என்னை கைது செய்ய முடியாது

இந்நிலையில் சம்மன் தொடர்பாக நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் "நான் ஒரு தமிழ் சாதி பொண்ணு, ஒரு தமிழ் பெண் இந்த தமிழ்நாட்டில் வளர்ச்சியடைவதை பலரால் சகித்து கொள்ள முடியவில்லை. ஆனால், வேறு மாநில பெண்கள் இங்கு வளர முடிகிறது. காந்தி, நேரு ஜெயிலுக்கு போகும் போது நான் போனா என்ன? என்னை கைது செய்வது என்பது உங்கள் கனவில் தான் நடக்கும் என கூறியுள்ளார்.

புத்திசாலி பெண்களுக்கு பாதுகாப்பில்லை

புத்திசாலி பெண்களுக்கு பாதுகாப்பில்லை

பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று சொல்லவில்லை ; எனக்கு தொந்தரவு கொடுத்த அந்த சமூகத்தை சேர்ந்தவர்களைதான் தவறானவர்கள் என்று சொன்னேன். மேலும், தமிழ்நாட்டில் என்னைப் போன்ற 'புத்திசாலி' பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை என்று கூறியிருந்தார் மீரா மிதுன்.

இன்னும் ஏன் கைது செய்யவில்லை?

இன்னும் ஏன் கைது செய்யவில்லை?

இந்நிலையில் மீரா மிதுனின் இந்த பேச்சு குறித்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த இயக்குநர் நவீன் முகமதலி மீரா மிதுனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது,

சமூகநீதியே தமிழகத்தின் முதன்மை கொள்கை என்பதையும், சக மனிதர்களை சாதி அடிப்படையில் இழிவாக பேசுவதை தமிழகம் ஏற்காது என்பதையும் உணர்த்தும் நேரமிது. இந்த பெண் மீது இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என குறிப்பிட்டுள்ளார்.

அக்னி சிறகுகள் படம்

அக்னி சிறகுகள் படம்

இயக்குநர் நவீன் முகதமலி மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநர் நவீனுக்கும் மீரா மிதுனுக்கும் ஏற்கனவே மோதல் இருந்துள்ளது. அதாவது நவீன் முகமதலி இயக்கத்தில் உருவாகும் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கிறார்.

கமல் செல்வாக்கால்

கமல் செல்வாக்கால்

இதில் அக்ஷரா ஹாசன் லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் தான்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆனால் கமல் தனது செல்வாக்கால் தன்னை நீக்கிவிட்டு அக்ஷராஹாசனை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக மீரா மிதுன் கடந்த 2019ஆம் ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார்.

மீரா மிதுனை கமிட் செய்யவே இல்லை

மீரா மிதுனை கமிட் செய்யவே இல்லை

மீரா மிதுனின் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் நவீன் டிவிட்டரில் பதில் தெரிவித்தார். அதாவது, அக்னிசிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்ஷரா தான் ஃபீமேல் லீடிங் ரோல். மீரா மிதுன் படத்தில் முதல் இடத்தில் ஒரு போதும் கமிட் செய்யப்படவே இல்லை.எனக்கு தெரியாமல் அந்தப்படத்தில் நடிப்பதாக அவரே பிரஸிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசவேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் இப்போது பேச வேண்டியதாயிற்று என கூறினார்.

ஆம்பளையா இருங்க

ஆம்பளையா இருங்க

நவீனின் இந்த பதிலுக்கும் பதிலடி கொடுத்த மீரா மிதுன், நீங்கள் ஒரு பெரிய பொய்யர். நீங்கள் பிரஸுக்கு கொடுத்த இன்டர்வியூ என ஒரு லிங்கை ஷேர் செய்தார். மேலும் ஒரு ஆணாக இருங்கள், உண்மையை பேச தைரியம் வேண்டும். கோழையாக இருக்காதீர்கள். அல்லது செலக்ட்டிவ் அம்னீஷியா உள்ளதா என மனநல மருத்துவரிடம் ஆய்வு செய்து கொள்ளுங்கள். என்னால் ஆதாரங்களை வெளியிட முடியும் என கிழித்துவிட்டிருந்தார் மீரா மிதுன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X