மேற்கத்திய ராப் இசையும் நம்ம ஊரு ஒப்பாரியும் கலந்து.. என்ஜாய் எஞ்சாமிக்கு பிரபல இயக்குநர் பாராட்டு!
சென்னை: 5 கோடி வியூஸ்களை கடந்த என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு பிரபல இயக்குநரான நவீன் முகமதலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் இண்டிபென்டெண்ட் ஆல்பம் என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது.
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது.

பிரபலங்கள் டப்ஸ் மேஷ்
இப்பாடல் யூட்யூபில் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ள நிலையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு டப்ஸ்மேஷ் செய்து கொண்டாடி வருகின்றனர்.

காட்டுப்பயலே..
இறுதிச்சுற்று படத்தில் இடம்பெற்ற உசுரு நரம்புல, காலா படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா, மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி, சூரரைப்போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் தீ.

தீ.. தெருக்குரல் அறிவு
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான தீயும்,
காலா படத்தில் இடம்பெற்ற உரிமை மீட்போம், வட சென்னை படத்தில் இடம்பெற்ற மத்திய சிறையிலே, மாஸ்டர் படத்தில் இடத்பெற்ற வாத்தி ரெய்டு உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தெருக்குரல் அறிவு ஆகிய இருவரும் இணைந்துதான் இந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியுள்ளனர்.

5 கோடி வியூஸ்..
இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ள நிலையில் யூட்யூப்பில் இதுவரை 5 கோடி வியூஸ்களை குவித்துள்ளது. இதனை மூடர் கூடம், அக்னி சிறகுகள் படங்களை இயக்கிய நவீன் முகமதலி இந்த பாடலை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு பெரிய சல்யூட்
அவர் பதிவிட்டிருப்பதாவது, மேற்கத்திய ராப் இசையும் நம்ம ஊரு ஒப்பாரியும் கலந்து fusion செய்து, கலையும் இசையும் சமூக மாற்றத்திற்கான இன்றியமையாத புரட்சி வடிவங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சந்தோஷ் நாராயணன், தெருக்குரல் அறிவு தோழர்களுக்கு ஒருபெரிய சல்யூட் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











