twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸில் அனிதா சம்பத்தின் சுமங்கலி விவகாரம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சுமங்கலி விவகாரம் குறித்து பேசிய செய்தி வாசிப்பாளரை பிரபல இயக்குநர் பாராட்டி தள்ளியிருக்கிறார்.

    மூடர் கூடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் நவீன் முகமதலி.

    அதனை தொடர்ந்து தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    ஷிவானிக்கு ஏதோ வில்லங்கமான ஈமோஜ் போல பாஸ்.. அங்க தட்டினா இங்க வலிக்கும் போல!ஷிவானிக்கு ஏதோ வில்லங்கமான ஈமோஜ் போல பாஸ்.. அங்க தட்டினா இங்க வலிக்கும் போல!

    திரௌபதி டீசர்

    திரௌபதி டீசர்

    இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ், ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திரௌபதி படத்தின் டீசர் வெளியான போது அதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு ரசிகர்கள் இயக்குநர் நவீன் முகமதலியிடம் கேட்டனர்.

    சர்ச்சை கருத்து

    சர்ச்சை கருத்து

    அப்போது குப்பையை பற்றியெல்லாம் கருத்துக்கூற முடியாது என டிவிட்டரில் காட்டமாக கூறியிருந்தார். இதுபெரும் சர்ச்சையானது. அதன் பிறகு படம் ரிலீஸாகி ஹிட்டடித்த போது இயக்குநர் மோகன் ஜி, படத்தை பற்றி கருத்து கூறுமாறு கேட்டு நவீன் முகமதலியை சீண்டினார்.

    அனிதா சம்பத்

    அனிதா சம்பத்

    சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் சுமங்கலிகள் குறித்து பேசியதை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    சுமங்கலி விவகாரம்

    சுமங்கலி விவகாரம்

    நவராத்திரி ஸ்பெஷலாக கடந்த திங்கள் கிழமை பிப்பாஸ் வீட்டில் நவராத்திரி செலிபிரேஷன் நடைபெற்றது. அப்போது சுரேஷ் சக்கவர்த்தி சுமங்கலி என்று சொன்ன ஒரு வார்த்தையையும் அவர் பேசியதையும் வைத்து பேசினார்.

    சனிக்கிழமை எபிசோட்

    சனிக்கிழமை எபிசோட்

    சுமங்கலியாய் இருப்பதால்தான் தன்னை முதல் ஆளாய் செய்ய சொன்னார், இல்லாவிட்டால் செய்ய சொல்லியிருக்க மாட்டாரா என்றும் சுமங்கலியாய் இல்லாதவர்களை ஒதுக்கக்கூடாது என்றும் பேசினார். அவர் பேசியதற்கு நடிகர் கமல்ஹாசனே சனிக்கிழமை எபிசோடில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாட்டின் அடையாளம்

    இந்நிலையில் அவர் பேசிய க்ளீப்பிங்கை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நவீன் முகமதலி, முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, சமத்துவம் பேசும் இவர் போன்ற பெண்களே தமிழ்நாட்டின் அடையாளம் என கைகளை தட்டியும் தம்ப்ஸ் அப் செய்தும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    English summary
    director Naveen Mohamedali praises News reader Anitha Sampath for her Speech about widows.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X