twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது.. உருக்கமான பதிவை வெளியிட்ட மூடர்கூடம் நவீன்!

    |

    சென்னை: இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது என மூடர்க்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் முகமதலி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Celebrities Quarantine | Shanthanu | KiKi | Dhruv Vikram

    உலகமே கொரோனா பீதியால் முடங்கி கிடக்கிறது. கொரோனா வைரஸால் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உலகம் முழுக்க கொரோனா வைரஸால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு மளமளவென அதிகரித்துள்ளது.

    உயிர் சம்பந்தம்

    உயிர் சம்பந்தம்

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பலரது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    கண்ணீர்விட்ட டிரைவர்

    கண்ணீர்விட்ட டிரைவர்

    இந்நிலையில் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் முகமதலி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். அதில் தான் சென்ற டாக்ஸி டிரைவர், தன்னிடம் 48 மணி நேரத்தில் தனக்கு கிடைத்த முதல் கஸ்டமர் நீங்கள்தான் என கண்ணீர்விட்டதாக கூறியுள்ளார்.

    மோசமான பாதிப்பு

    மோசமான பாதிப்பு

    மேலும் அந்த டிரைவர் தனது மனைவி இன்றாவது மளிகை சாமான் வாங்கி வருவேன் என எதிர்பார்த்திருக்கிறார் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் நம்மை பல வழிகளிலும் பாதிக்கிறது. ஆனால் தினமும் வருமானத்தை எதிர்பார்த்திருப்பவர்களை மோசமாக பாதிக்கிறது என்றும் நவீன் கூறியுள்ளார்.

    கடைசி கஸ்டமர்

    அந்த நபருக்கு நான் கூடுதலாக 500 ரூபாய் கொடுத்துள்ளேன்.
    தயவு செய்து கேப் டிரைவர்ஸ், தெரு விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு கொஞ்சம் கூடுதலாக கொடுங்கள். அவரது கடைசி கஸ்டமர் நீங்களாக கூட இருக்கலாம் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Director Naveen Mohamedali has tweeted about corona virus impact on public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X