எங்களை வசீகரித்திருந்த ஒரு தேவதையின் கண்கள்.. வரைந்த ஓவியத்தை வெளியிட்டு டிவிஸ்ட் வைத்த இயக்குநர்!

சென்னை: தன்னை வசீகரித்த தேவதையின் கண்கள் என்று கூறி தான் வரைந்த ஓவியத்தை இயக்குநர் நவீன் முகமதலி வெளியிட்டிருக்கிறார்.

மூடர் கூடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் நவீன் முகமதலி. அதனை தொடர்ந்து தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ், ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திரௌபதி படத்தின் டீசர் வெளியான போது அதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு ரசிகர்கள் இயக்குநர் நவீன் முகமதலியிடம் கேட்டனர்.

திரௌபதி படம்

திரௌபதி படம்

அப்போது குப்பையை பற்றியெல்லாம் கருத்துக்கூற முடியாது என டிவிட்டரில் காட்டமாக கூறியிருந்தார். இதுபெரும் சர்ச்சையானது. அதன் பிறகு படம் ரிலீஸாகி ஹிட்டடித்த போது இயக்குநர் மோகன் ஜி, படத்தை பற்றி கருத்து கூறுமாறு கேட்டு சீண்டினார்.

தேவதையின் கண்கள்

தேவதையின் கண்கள்

இந்நிலையில் இயக்குநர் நவீன் முகமதலி, தனது டிவிட்டர் பக்கத்தில் தான் பள்ளிப்பருவத்தில் வரைந்த பெண்ணின் கண்கள் கொண்ட ஓவியத்தை ஷேர் செய்திருக்கிறார். அதில் நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது தீட்டிய பென்சில் ஓவியம். அப்போது எங்களை வசீகரித்திருந்த ஒரு தேவதையின் கண்கள். உங்களுக்கும் அதே தேவதைதான் தெரிகிறாரா? என கேட்டுள்ளார்.

மூடர்கூடம் ஃபர்ஸானா

மூடர்கூடம் ஃபர்ஸானா

இதனை பார்த்த நெட்டிசன்கள், மெல்ல திறந்தது கதவு படத்தின் ஹீரோயின் அமலா என்றும் ஐஸ்வர்யா ராய் என்றும் பதில் கூறி வருகின்றனர். மேலும் மூடர் கூடம் ஃபர்ஸான தெரிகிறார்.. கண்ணோடு கண்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.

அமலா கண்கள்

அமலா கண்கள்

உனக்காக பனிகாற்றை தினம் தூது போக வேண்டினேன்.. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே... மெல்ல திறந்தது கதவு.. அமலா கண்கள்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

Recommended Video

தாலிய அறுக்க வெச்சிடீங்க | Director Amir Emotional Speech
தாடி வைத்த நபர்

தாடி வைத்த நபர்

இப்பவும் உலக அழகியாவே இருக்கிற ஐஸ்வர்யா ராய் தானே அந்த தேவதை.. என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். சிலர் தாடி வைத்த நபரை வரைந்துள்ளீர்கள் என்றும் கலாய்த்துள்ளனர். அதே நேரத்தில் அந்த ஓவியத்தில் நவீன் என்று கையெழுத்திட்டிருப்பதையும் சிலர் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X