விஜய் ஆன்டனியோட கெட்டப்ப பார்த்து ஹீரோ யாருன்னு ப்ரோகிராமர் கேட்டாரு... டைரக்டர் ட்வீட்
சென்னை : விஜய் ஆன்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகிவரும் படம் அக்னி சிறகுகள்.
மூடர்கூடம் டைரக்டர் நவீன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்து வருகிறார்.
திரில்லர் படமாக உருவாகிவரும் இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்து வருகிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.

நவீன் இயக்கம்
விஜய் ஆன்டனி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், அக்ஷரா ஹாசன், ராய்மா சென் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வருகிறது அக்னி சிறகுகள் படம். மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் இந்த படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.

முதல்முறையாக படப்பிடிப்பு
முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை மாஸ்கோ, ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட இடங்களில் சூட் செய்து வந்துள்ளது படக்குழு. முதல்முறையாக கஜகஸ்தானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெளியீடு
இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டை படத்தின் இயக்குநர் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஜூம் வழியாக படத்தின் பின்னணி கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், அப்போது இசையமைப்பாளர் மற்றும் கீபோர்ட் ப்ரோகிராமருடன் தான் வேலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கவர்ந்த இயக்குநர்
முன்னதாக நவீன் தன்னை ஆரம்பம் முதலே தன்னுடைய கதை மூலம் கவர்ந்ததாகவும், தான் படத்தின் வெளியீட்டிற்காக ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் நடிகர் விஜய் ஆன்டனி தெரிவித்திருந்தார். சிறப்பான கதை சிறப்பான வரவேற்பை பெற்றுவிடும் என்றும் அதேபோல அக்னி சிறகுகளும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











