மீரா மிதுன் கைது சாதிய வசைபாடும் பலருக்கும் ஒரு அச்சத்தை தரும்.. இயக்குநர் நவீன் ட்வீட்!

சென்னை: நடிகை மீரா மிதுன் கைது தொடர்பாக, இயக்குநர் நவீன் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சாதி அடிப்படையில் இழிவாக பேசிய இந்த பெண் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மீரா மிதுனுக்கு எதிராக மூடர்கூடம் படத்தை இயக்கி நடித்திருந்த நவீன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுனின் கைது "சாதிய வசைபாடும் பலருக்கும் ஒரு அச்சத்தை தரும்" என இயக்குநர் நவீன் பதிவிட்டுள்ளார்.

டிரெண்டிங்கில் மீரா மிதுன்

டிரெண்டிங்கில் மீரா மிதுன்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சர்ச்சை நடிகை மீரா மிதுன் போலீசிடம் சிக்கியதை அறிந்த நெட்டிசன்கள் #MeeraMitunArrest எனும் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குத்திட்டு செத்துடுவேன்

குத்திட்டு செத்துடுவேன்

ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்த மீரா மிதுன் தொடர்ந்து தனது வாய் சவடாலை நிறுத்தாமல் பட்டியலினத்தை சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை சினிமாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என பேசிய விவகாரத்தில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்ய போலீசார் வந்த நிலையில், என்னை தொட்டால் குத்திட்டு செத்துடுவேன் என பரபரப்பாக மீரா மிதுன் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தர்மம் வெல்லும்

தர்மம் வெல்லும்

மீரா மிதுன் கைது செய்யப்பட்ட நிலையில், ஏகப்பட்ட நெட்டிசன்கள் அது தொடர்பாக கமெண்ட் அடித்து வருகின்றனர். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என இந்த நெட்டிசன் ட்வீட் போட்டு இருக்கிறார்.

அச்சத்தை தரும்

அச்சத்தை தரும்

"U'v never been famous, but notorious always. இதுவரை உங்கள பித்துப் பிதற்றல்களை நகைத்தபடி கடந்து சென்றோம். ஆனால் இம்முறை நீங்கள் வரம்பு மீறிவிட்டீர். உங்கள் கைது சாதிய வசைபாடும் பலருக்கு ஒரு அச்சத்தை தரும். இது சமத்துவம் போற்றும் தமிழகம்!" என மூடர்கூடம் இயக்குநர் நவீன் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X