twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும்… இயக்குனர் நவீன் நம்பிக்கை !

    |

    சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும் என நம்புவதாக இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.

    பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

    ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்...வைரலாகும் வீடியோ ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்...வைரலாகும் வீடியோ

    பேரறிவாளன் விடுதலைக்காக அற்புதம்மாள் பல ஆண்டுகளாக தனியாளாக போராடி வருகிறார்.

    29 ஆண்டுகளாக சிறையில்

    29 ஆண்டுகளாக சிறையில்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    அதிகாரம்

    அதிகாரம்

    சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என கூறப்பட்டு உள்ளது.

    புதிய அரசு நிறைவேற்றும்

    புதிய அரசு நிறைவேற்றும்

    இந்நிலையில் இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அற்புதம் அம்மாளின் உறக்கமற்ற நீண்ட இரவு நீங்கி விடியல் பிறக்கும் என்று நம்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    தயாரித்து இயக்கினார்

    தயாரித்து இயக்கினார்

    இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல திறமைகளைக் கொண்டவர் நவீன். இவர் சிம்புதேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வடிவேல் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலும், பசங்க படத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர், மூடர் கூடம் படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார்.

    English summary
    The new government would release 7 people says Director Naveen
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X