கலைஞர் கையெழுத்து பத்திரிகை துவங்கிய போதே இந்த தீர்ப்பை எழுதிவிட்டார்!
கையெழுத்து பத்திரிகை துவங்கியபோதே தீர்ப்பை எழுதிவிட்டார்.
Recommended Video

ட்விட்டரில் கருணாநிதிக்கு இரங்கல் சொன்ன திரையுலக பிரபலங்கள்- வீடியோ
சென்னை: கலைஞர் கையெழுத்து பத்திரிகை துவங்கிய போதே இந்த தீர்ப்பை எழுதிவிட்டார் என இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். மெரினாவில் அண்ணா சமாதி அருகே, கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு எதிரான வழக்கில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இயக்குனர் நவீன், இந்த தீர்ப்பு இப்போது எழுதப்பட்டதல்ல, அது கலைஞர் மாணவ பருவத்தில் கையெழுத்து பத்திரிகை துவங்கி முதல் சொல் எழுதியபோது அவரே எழுதிய தீர்ப்பு எனக் கூறியுள்ளார்.
மூடர்கூடம் திரைப்படத்திற்கு பிறகு, அலாவுதின் அற்புத கேமரா திரைப்படத்தை இயக்கி வருகிறார் நவீன்.


Click it and Unblock the Notifications











