அருண் விஜய் -விஜய் ஆன்டணி இணைந்து மிரட்டும் அக்னி சிறகுகள்... சூப்பர் அப்டேட் இதோ!
சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் விஜய் ஆன்டணியுடன் இணைந்து அருண் விஜய் நடித்துவரும் படத்தின் சூப்பர் அப்டேட்டை படத்தின் இயக்குநர் நவீன் தற்போது வெளியிட்டுள்ளார். இதனால் அருண் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம் மற்றும் அவரது மைத்துனர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள யானை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அவர் அடுத்ததாக நடித்துவரும் அக்னி சிறகுகள் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

மூடர்கூடம் இயக்குநர்
கடந்த 2013ல் வெளியான மூடர்கூடம் என்ற சிறப்பான படத்தை எழுதி இயக்கி நடித்த நவீன் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இந்தப் படத்தில் விஜய் ஆன்டணியும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் சிறப்பான திரைக்கதையுடன் அக்னி சிறகுகள் படம் உருவாகியுள்ளது.

காத்திருக்கும் அக்னி சிறகுகள்
மூடர் கூடம் படத்திற்கு பிறகு கொளஞ்சி என்ற படத்தை தயாரித்த நவீன், பிறகு அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அக்னி சிறகுகள் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படமும் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்களாக காத்திருக்கிறது.

10 ஆண்டுகள் காத்திருப்பு மூடர் கூடம் படத்தை இயக்கி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது நவீனின் இரண்டாவது படமாக அக்னி சிறகுகள் படம்தான் வெளியாக உள்ளது. படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ட்ராயன், சதீஷ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் எடுக்கப்பட்ட சேசிங் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மூடர் கூடம் படத்தை இயக்கி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது நவீனின் இரண்டாவது படமாக அக்னி சிறகுகள் படம்தான் வெளியாக உள்ளது. படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், ரைமா சென், சென்ட்ராயன், சதீஷ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் எடுக்கப்பட்ட சேசிங் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அக்னி சிறகுகள் அப்டேட்
இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட சிஜி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாகவும் இயக்குநர் நவீன் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











