கமல் சார் பேசுறதே புரியாது.. இருந்தாலும் அவரை பார்த்துக்கிட்டே இருப்பேன்..நெல்சன் பேச்சு!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசைவெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய, நெல்சன் திலீப்குமார், இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நடந்தது அப்போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கிக்கொண்டு இருந்தேன். இப்போது நான் ஒரு இயக்குநராகிவிட்டேன் என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வந்த இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த தற்போது படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமார்: இந்த விழாவில் பேசிய நெல்சன், இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நடந்தது அப்போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கிக்கொண்டு இருந்தேன். இப்போது நான் ஒரு இயக்குநராகிவிட்டேன். இந்த படத்தின் ஆரம்பம் முதல் இப்போது வரை, நான் இருந்து கொண்டு என்று தான் இருக்கிறேன் என்பதை சொல்லியே ஆக வேண்டும். ஏன் என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே நான் கமல் சாருடன் ரொம்ப நெருக்கமாகவே இருந்தேன். ஒருமுறை கமல் சார் என்னை திட்டிவிட்டார், அவரிடம் திட்டுவாங்கியதையே நான் ரொம்ப பெருமையாக பார்த்தேன். அவருக்கு தமிழில் எழுத்து பிழை இருந்தால் கோவப்படுவார். பிக் பாஸின் போது, ஸ்கிரிப்டில் ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால், இதையார் எழுதுனா என்று கேட்டு திட்டுவாரு.
ஒன்னுமே புரிய: ஆனால் அவரிடம் திட்டுவாங்கியது எனக்கு பெருமை தான் என்றார். மேலும், நான் கோலமாவு கோகிலா படம் எடுத்துக்கொண்டிருந்த போது, கமல் சாரிடம் பேசினேன், அப்போ அவர்ரொம்ப டெக்னிக்கல பேசுனாரு, ஆனால், அவர் பேசுனதே எனக்கு புரியாது, இருந்தாலும் அவர் பேசுவதை பார்த்துக்கொண்டே இருப்பேன், ஒருகட்டத்தில் நானே சார் நீங்க பேசுறது எனக்கு எதுவுமே புரியல சார் என்று சொல்லிவிட்டேன், உனக்கு புரியலனு எனக்கும் தெரியும் என்று ஜாலியாக கமல் சொன்னார் என்று நெல்சன் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
லோகேஷ் கனராஜ்: இதைத்தொடர்ந்த பேசிய லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலிருந்து படத்துக்காக காத்திருக்கிறேன். விக்ரம் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூட கமல், இந்தியன் தாத்தா கெட்டப்பில் தான் இருந்தார். ஏதோ படத்திற்கு கையெழுத்து வாங்கபோன மாதிரி எனக்கு தெரியவில்லை, ஒரு ரசிகனாக ஆட்டோகிராப் வாங்க என்ற மாதிரி இருந்தது. அப்போ அவர் அந்த தாத்தா கெட்டப்பில் இருந்ததால், அதையெல்லாம் எடுத்துவிட்டுத்தான் கையெழுத்தே போட்டார். அவரின் அந்த முழு ஒப்பனைக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
அப்டேட் கேட்டேன்: இந்தியன் 2 படத்தோட அப்டேட்டை நீங்க எல்லாம் கேட்பதற்கு முன்னாடியே, எப்போதெல்லாம் கமல், ஷங்கர், அனிருத்தை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் படம் எப்படி வந்து இருக்கு என்று கேட்டு தெரிந்து கொள்வேன் என்றார். இந்த விழாவில், கமல்ஹாசன், ஷங்கர், அனிருத், அதிதி ஷங்கர், வசந்த பாலன், தம்பி ராமையா, லோகேஷ்கனகராஜ், நெல்சன், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பா.விஜய் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications