Nelson: வேட்டை மன்னன் ஸ்கிரிப்ட்ல நிறைய குறைகள் இருக்கு.. ஒப்புக்கொண்ட நெல்சன்!

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

இந்தப் படம் நெல்சனுக்கு சிறப்பாக கைகொடுத்து மீண்டும் அவரது மாஸை நிரூபித்துள்ளது. 500 கோடி ரூபாய் கிளப்பிலும் படம் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் கலெக்ஷன்ஸ் 500 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.

Director Nelson dilipkumar accepts that in Simbus dropped movie vettai mannan there were flaws

சிம்புவின் வேட்டை மன்னன் பட ஸ்கிரிப்ட் குறித்து பேசிய நெல்சன்: கோலமாவு கோகிலா படத்தின்மூலம்தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தமிழில் துவங்கினார் நெல்சன். இவருக்கு இந்த முதல் படமே நயன்தாராவுடன் அமைந்தது. படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபுவும் கலக்கியிருந்தார். இந்தப் படம் சிறப்பான வெற்றியை நெல்சனுக்கு கொடுத்து, அனைவரையும் அவர் குறித்து பேச வைத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன நடிப்பில் டாக்டர் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்திருந்தார் நெல்சன். இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

முன்னதாக ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி இந்தப் படத்தில் அமைந்தது. எப்போதும் தன்னுடைய படங்களில் அலப்பறையை கூட்டும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் அமைதியான மற்றும் அழுத்தமான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார். ராணுவ டாக்டர் வேடத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தயாரிப்பாளராகவும் இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்தது.

அடுத்தடுத்த இந்தப் படங்கள் கொடுத்த வெற்றியால், நேரடியாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கைக்கூடியது. ஆனால் இந்தக் கூட்டணி நெல்சனுக்கு கைக்கொடுக்கவில்லை. மாறாக படம் சொதப்பியது. கலவையான விமர்சனங்களை மட்டுமில்லாமல் அதிகமான ட்ரோல்களையும் நெல்சனுக்கு இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது. முன்னதாக கமிட்டான ரஜினியின் படமும் கைநழுவும் சூழலை பீஸ்ட் படத்தின் தோல்வி ஏற்படுத்தியது. ஆனாலும் அந்தப் படம் அவரை விட்டு எங்கும் செல்லவில்லை.

நெல்சனிடம் இருந்த நம்பிக்கை காரணமாக ரஜினி மட்டுமில்லாமல் தயாரிப்புத் தரப்பான சன் பிக்சர்சும் நெல்சனை கைவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். இதனால் தற்போது ஜெயிலர் படம் சிறப்பாக உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இரண்டு வாரங்களை கடந்துள்ள இந்தப் படம் தற்போது 500 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வந்தபோதிலும் ஜெயிலர் கலெக்ஷனை தடுக்க முடியவில்லை.

இந்தப் படங்களுக்கு முன்னதாக சிம்புவின் வேட்டை மன்னன் படத்தைதான் நெல்சன் முதலில் இயக்கினார். சில மாதங்கள் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், படம் திடீரென கைவிடப்பட்டது. இந்தப் படங்களின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் ட்ராப் ஆனது சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைதான் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை நெல்சன் மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Nelson dilipkumar accepts that in Simbus dropped movie vettai mannan there were flaws

இந்நிலையில் வேட்டை மன்னன் படத்தின் ஸ்கிரிப்டில் அதிகமான குறைகள் உள்ளதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். சிம்பு தன்னுடைய ஸ்கூல்மேட் என்று கூறியுள்ள நெல்சன், விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்தபோது அவரை சந்தித்து தான் வாய்ப்பு கேட்டதாக கூறியுள்ளார். சில காரணங்களால் இந்தப் படம் ட்ராப் ஆனதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து சிம்புவை மீண்டும் சந்தித்தால் வேட்டை மன்னன் படத்தை தொடர்வது குறித்து கேட்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த நெல்சன், வேட்டை மன்னன் ஸ்கிரிப்டில் குறைகள் உள்ளதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். அந்த காலகட்டத்தில் இருந்ததை காட்டிலும் தான் தற்போது முதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அதனால் அந்தப் படத்தின் குறைகளை தான் கண்டறிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடிப்பில் திட்டமிடப்பட்ட வேட்டை மன்னன் படம் குறித்து தற்போது நெல்சன் பேசியுள்ளதால் இந்தப் படம் மீண்டும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X