Rajinikanth: அடுத்தது அதுதான்.. ஜெயிலர் 2 படத்தை கன்ஃபார்ம் செய்த நெல்சன் திலீப்குமார்!

சென்னை: ரஜினிகாந்த் -நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியான படம் ஜெயிலர்/ கதைக்களத்திலும் ரஜினியின் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் மிகச் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது இந்தப்படம். படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டையடுத்து படத்தின் இரண்டாவது பாகத்தை சன் பிக்சர்ஸ் உருவாக்க உள்ளதாக அப்போதே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கான வேலைகளில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தற்போது ஈடுபட்டு வருகிறார். கூலி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அதை நெல்சன் திலீப்குமாரும் தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

rajinikanth jailer 2 movie nelson dilipkumar

ஜெயிலர் படம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி அவரது வேட்டையன் படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் வசூலில் பின்னி பெடலெடுத்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்த நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. கூலி படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2 படம்: தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் இந்த சூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

ஜெயிலர் 2வை உறுதிப்படுத்திய நெல்சன்: ஜெயிலர் ஹிட்டையடுத்து தன்னுடைய அடுத்த படத்திலும் ரஜினிகாந்தையே நெல்சன் திலீப்குமார். இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இதற்கான வேலைகளில் தற்போது நெல்சன் ஈடுபட்டுள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றியையடுத்து அவர் தற்போது கவின் லீட் கேரக்டரில் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்றுள்ள நெல்சன் திலிப்குமார் அடுத்ததாக தான் ஜெயிலர் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் இணைய உள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கூலியை தொடர்ந்து ஜெயிலர் 2: கேஎஸ் ரவிக்குமாருக்கு கொடுத்துள்ள பேட்டியில் கவின் மற்றும் நெல்சன் திலீப்குமார் இணைந்து பேசியுள்ளனர். இதில் ஜெயிலர் படம் ஹிட்டானதாலேயே ப்ளடி பெக்கர் படத்தை தான் தயாரித்ததாகவும், தற்போது இந்தப் படம் ஹிட்டடிக்க கவின் உள்ளிட்டவர்கள் கோயில் கோயிலாக ஏறி இறங்கி வருவதாகவும் பேசியுள்ளார். மேலும் தற்போது ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தையடுத்து ஜெயிலர் 2 படத்தை தான் இயக்கவுள்ளதாகவும் நெல்சன் கூறியுள்ளார். தான் இடையில் வேறு படங்களில் இணைய மாட்டேன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X