Nelson :அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணையும் நெல்சன்.. தொடர்ந்து மாஸ் காட்டுவாரா!

சென்னை : இயக்குநர் நெல்சன் திலீப்குமார் விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director Nelson dilipkumar continously joined leading actors

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகர்களுடன் இணையும் நெல்சன் திலீப்குமார் : இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. ஆனாலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. முந்தைய படங்களில் தன்னுடைய பெஸ்டை கொடுத்திருந்தார் நெல்சன். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த டாக்டர் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

ஆனால் விஜய் போன்ற மாஸ் நடிகரை இயக்கும் டென்ஷன் காரணமாகவோ என்னவோ பீஸ்ட்டை எதிர்பார்த்த அளவிற்கு கொடுக்காமல் சொதப்பினார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரஜினியின் படத்தில் கமிட்டாகியிருந்தார் நெல்சன். பீஸ்ட் படம் சொதப்பியதை அடுத்து அவர் தொடர்ந்து ரஜினியை இயக்குவாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரை நம்பி நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

Director Nelson dilipkumar continously joined leading actors

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் கண்டிப்பாக ரஜினிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், நெல்சன் பீஸ்ட் படத்தில் இழந்த தன்னுடைய பெயரை இந்தப் படத்தில் மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நெல்சன் படங்களை கொடுத்து வருகிறார். நயன்தாராவுடன் கோலமாவு கோகிலாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என தொடர்ந்து வருகிறது.

Director Nelson dilipkumar continously joined leading actors

இந்நிலையில் அடுத்ததாக தனுஷுடன் அவர் தனது அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்திற்கு முன்னதாகவே அவர் தனுஷிற்கு ஒரு கன்டெண்டை சொன்னதாகவும் அதை தனுஷ் ஓகே செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் இணைவாரா அல்லது தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் இணைவாரா என்பது குறித்து, தனுஷின் பிறந்தநாளின்போது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X