Jailer: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் அதிரடி நடிகர்.. ஆட்டத்தை துவங்கிய நெல்சன் திலீப்குமார்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்த சூழலில் ஜெயிலர் 2 படமும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Director Nelson dilipkumar going to begin Jailer 2 movie pre production this month

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தமிழில் ரஜினிகாந்த் மாஸ் காட்டிய சூழலில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை இந்த படத்தில் இணைத்திருந்தார் நெல்சன் திலிப்குமார். இதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

ஜெயிலர் 2 படம்: இதில் சிவராஜ்குமார் சில நிமிடங்களே வந்த போதிலும் அதிகமாக ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளை தாண்டி வசூலித்து மாஸ் காட்டியது. இந்த படத்தை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ் இந்த வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தையும் தயாரிக்க உள்ளது சன் பிக்சர்ஸ். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளை இந்த மாதத்தில் நெல்சன் திலீப்குமார் துவங்கவுள்ளதாகவும் படத்திற்கு ஹுகும் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கூலி படத்தில் இணையும் ரஜினி: முன்னதாக லோகேஷ் கனகராஜ் -ரஜினிகாந்த் கூட்டணியில் கூலி படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமயமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், தற்போது சென்னை திரும்பியுள்ளார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ள சூழலில் அதற்காக தன்னை ரஜினிகாந்த் தயார் படுத்திக் கொண்டுள்ளார். இதனிடையே ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகளை நெல்சன் இந்த மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியுடன் பாலகிருஷ்ணா கூட்டணி: இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ரஜினிக்கு அடுத்தபடியாக முக்கியமான கேரக்டரில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள சூழலில் முன்னதாக ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை நெல்சன் திலீப் குமார் இணைப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே ஜெயிலர் படத்தை போலவே ஜெயிலர் 2 படமும் அதிரடி சரவெடியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X