ஜூனியர் என்டிஆருடன் கைகோர்க்கும் நெல்சன் திலீப்குமார்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2தான் முதல்லயாம்!

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவரை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கியுள்ளது. கோலமாவு கோகிலா படத்தில் துவங்கி இவரது பயணம் கடந்த ஆண்டில் ஜெயிலர் படம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தொடர்ந்து வருகிறது. அடுத்தப்படத்திலும் இவர் ரஜினிகாந்தையே ஜெயிலர் 2 படத்திற்காக இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் -நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டியிருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளிலும் தொடர்ந்து வில்லன்களை பழிவாங்கும் காட்சிகளிலும் அவரது நடிப்பு அதிரடி கிளப்பியிருந்தது.

rajinikanth nelson dilipkumar junior ntr

ஜெயிலர் படம்: கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் -நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ரிலீசாகியிருந்தது ஜெயிலர் படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில், அதிரடி சரவெடியாக வரவேற்பிலும் வசூலிலும் மாஸ் காட்டியது ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிரசென்ஸ் சிறப்பாக அமைந்திருந்தது. ரிடையர்ட் ஜெயிலராக இந்தப் படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ரிடையர்ட் ஆன நிலையில், வீட்டில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை காமெடியாக பதிவு செய்திருந்தார் இயக்குநர். இதேபோல, தன்னுடைய மகன் இறப்பிற்கு பழிவாங்க ரஜினிகாந்த் களமிறங்கும் காட்சிகளும் மிரட்டியது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்: தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன்தான் குற்றவாளி என்ற வகையில் அவர் எடுக்கும் முடிவும் அதிரடி காட்டியது. இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக உருவான இந்தப் படத்தின் வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் மற்றும் படக்குழுவினருடன் தயாரிப்பு தரப்பு பகிர்ந்துக் கொண்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், இதன் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்: ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்குப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரை அவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளார்.

மீண்டும் இணையும் தேவரா கூட்டணி: தேவரா படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் இந்தப் படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நெல்சன் திலீப்குமார் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேவரா படத்தின் பிரமோஷன்களுக்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல கோலிவுட்டின் இளம் இயக்குநர்களுடன் இணையவும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது ஆசை அடுத்தடுத்து நிறைவேறும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X