கவினை சந்தேகப்பட்டுட்டேன்.. ஆனா.. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பகிர்ந்த ரகசியம்!

சென்னை: நடிகர் கவின் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமாருடன் இணைந்துள்ள பிளடி பெக்கர் படம் இந்த மாத இறுதியில் தீபாவளி ரேசில் கலந்துக் கொள்ளவுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ள நிலையில் படத்தில் கவினுடன், மாருதி பிரகாஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் சுகதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள பிளடி பெக்கர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் பிச்சைக்காரராக கவின் நடித்துள்ள நிலையில், இந்த டீசர் கவனத்தை பெற்றுள்ளது. கால் இல்லாத பிச்சைக்காரராக யாசகம் கேட்கும் கவின், உடனே எழுந்து ஆட்டம் போடுவதாக இந்த டீசர் அமைந்திருந்தது.

nelson dilipkumar kavin

பிளடி பெக்கர் படம்: கவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் டாடா, ஸ்டார் என இவரது படங்கள் வசூல் வேட்டை நடத்தியிருந்தன. புதுமுக இயக்குநர்களாக இருந்தாலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கவின். தன்னுடைய இயல்பான நடிப்பினால் தான் ஏற்கும் கேரக்டர்களை ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமைத்து வருகிறார். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பிளடி பெக்கர் பட டீசர்: முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிச்சைக்காரராக கவின் நடித்துள்ளார். இதையொட்டி அவரது லுக் டீசர் மற்றும் போஸ்டர்களில் வெளியான நிலையில், படத்தின் மிகப்பெரிய அடையாளமாக இந்த லுக் காணப்படுகிறது. அவர் பிச்சை எடுப்பதற்கான காரணங்கள் போன்றவை படத்தின் கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கவினை பாராட்டிய நெல்சன் திலீப்குமார்: இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கவின், இயக்குநர், ரெடின் கிங்ஸ்லியுடன் கலந்துக் கொண்ட இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான நெல்சன் திலீப்குமார், இந்தப் படத்தில் கவினின் நடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக சிவபாலன் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது இவ்வளவு சிறப்பாக கவின் பர்ஃபார்ம் செய்வாரா என்ற சந்தேகம் இருந்ததாகவும் படம் வெளியானவுடன் இவனை போய் சந்தேகப்பட்டு விட்டோமே என்ற ஆனந்தக் கண்ணீர் வந்ததாகவும் நெல்சன் திலீப்குமார் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பாராட்டிற்கு கவின் கைக்கூப்பி நன்றி தெரிவித்ததையும் இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

வச்சு செஞ்ச இயக்குநர்: தொடர்ந்து பேசிய நெல்சன் திலீப்குமார், மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கும் கவினை, இயக்குநர் சிவபாலன் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இந்த கேரக்டரில் நடிக்க வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் கவினை ஸ்மார்ட்டாக பார்த்த நிலையில், இயக்குநர் மட்டுமே ஆழ்வார்பேட்டை சிக்னலில் பிச்சையெடுப்பவராக பார்த்துள்ளதாகவும் நெல்சன் நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். படம் அடுத்த லெவலில் பர்ஃபார்மென்சை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தீபாவளிக்கு இந்தப் படம் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X