Nelson Dilipkumar - ரஜினி வீட்டுக்கு லேட்டா போனதுக்கான காரணம் அனிருத் தான்.. சீக்ரெட் சொன்ன நெல்சன்

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) ரஜினியின் வீட்டுக்கு ஏன் தாமதமாக போனேன் என்பது குறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியிருக்கிறார்.

இரண்டு வருடங்களாக ரஜினிகாந்த் நடித்த படம் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தலைவர் தரிசனத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். பான் இந்தியா படமாக கடந்த பத்தாம் தேதி வெளியானது.

Director Nelson Dilipkumar has spoken about why he went late to Rajinis house

செம ரெஸ்பான்ஸ்: இரண்டு வருடங்களுக்கு பின் ரஜினி படம் வருவதால் அவரது ரசிகர்கள் கடந்த 10ஆம் தேதியை திருவிழா போல் கொண்டாடினார்கள். படமும் அவர்களுக்கு திருப்தியையே கொடுத்திருக்கிறது. முக்கியமாக ஒரு வெற்றிக்கு காத்திருந்த ரஜினிக்கு மாஸாக நெல்சன் திலீப்குமார் கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும்; ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகின்றனர்.

நெல்சனுக்கும் கம்பேக்: ரஜினிகாந்த்துக்கு மட்டுமின்றி நெல்சன் திலீப்குமாருக்கும் இது கம்பேக்காகவே அமைந்திருக்கிறது. பீஸ்ட் படத்தால் ரொம்பவே ட்ரோல்களை சந்தித்த அவர் ஜெயிலரில் அதற்கு பதிலடி கொடுத்துவிட்டார். படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலிலும் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனமே இருக்கிறது. ஒரு கமர்ஷியல் படத்தை சரியான பேக்கேஜுடன் கொடுத்ததால் படம் ஹிட் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

தாமதமாக போன நெல்சன்: இதற்கிடையே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நெல்சன் திலீப்குமார் குறித்து பேசிய ரஜினிகாந்த், "காலை 11.30 மணிக்கு நெல்சனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தேன். ஆனால் 12 மணி ஆகியும் வரவில்லை. ஒருவழியாக வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டு காம்பவுண்டிலிருந்து உள்ளே வர அதிகபட்சம் 1 நிமிடம் ஆகும்.

ஆனால் 5 நிமிடங்கள் ஆகியும் வீட்டுக்குள் நெல்சன் வரவில்லை. என்னடா இதுனு ஸ்க்ரீனை திறந்து பார்த்தா; மொபைல நோண்டிட்டு நிதானமா வந்தாரு. வந்த பிறகு சார் ஒரு நல்ல காஃபி இருந்தா சொல்லுங்கனு சொன்னார். பிறகு கதையை கூற ஆரம்பித்தார் " என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியது.

நெல்சன் பேட்டி: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு பல ஊடகங்களில் பேட்டி அளித்துவருகிறார் நெல்சன் திலீப்குமார். அப்போது அவரிடம் ரஜினி வீட்டுக்கு லேட்டாக போனது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கடந்த ஐந்து வருடங்களாகவே நான் இரவில் சீக்கிரம் உறங்குவது இல்லை. அனிருத் எப்போதுமே இரவில்தான் வேலை பார்ப்பார். அவரை பார்க்கப்போனால் அதிகாலை 4 மணிக்கு தான் கிளம்புவேன். உடனே அவரோ என்னங்க இவ்ளோ சீக்கிரமா போறீங்கம்பார். அவரைப் பொறுத்தவரை 4 மணி எல்லாம் லேட் கிடையாது. ரொம்ப சீக்கிரம்.

அனிருத்துடன் இரவில் இப்படி இருந்துவிட்டு பகலில் வேலை பார்ப்பவர்களையும் பார்க்க வேண்டும். அதனால் எனக்கு அந்த நேரம் சரியாக அமையாது. அதுதான் ரஜினி சார் வீட்டுக்கு தாமதமாக போக காரணம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X