With Love.. நடக்க முடியாமல் தவித்த DD.. கைதாங்கலாக கூட்டி வந்த நெல்சன்.. எல்லாம் ரஜினி மகளுக்காக!
சென்னை: தமிழ் தொலைகாட்சி உலகில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலங்களை பேட்டி எடுத்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அண்மைக் காலமாக தனது கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் டிடி பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. ஏதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடிவெடுத்தாலும், அமர்ந்து கொண்டேதான் தொகுத்து வழங்குகிறார். உடல்நிலை சரியில்லாமல் அமர்ந்து கொண்டு தொகுத்து வழங்குவதால், நிகழ்ச்சியை மிகவும் நேர்த்தியாக, அழகாக, ரசனைக்குரியதாக கொண்டு செல்வதில் எந்த குறையும் வைப்பதில்லை.

இப்படி இருக்கையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் உருவான படமான வித் லவ் படத்தின் செலிபிரிட்டி ஷோவிற்கு சென்னை சத்யம் திரையரங்கிற்கு வந்திருதார். படம் பார்க்க வந்த டிடி-ஐ சௌந்தர்யா ரஜினிகாந்த் பேரன்போடு கட்டி அரவணைத்து வரவேற்றார். இப்படி இருக்கையில் படம் பார்த்து முடித்து வெளியே வரும்போது படி இறங்க டிடி-க்கு இயக்குநரும் டிடி-யின் நண்பருமான நெல்சன் திலீப் குமார் உதவினார். அதாவது கை தாங்கலாக பிடித்து டிடி-ஐ கீழே அழைத்து வந்து அவரை காரில் அனுப்பி வைத்தார். டிடிக்கு நெல்சன் உதவியது தொடர்பான காட்சிகளைப் பார்த்த இணையவாசிகள் பலரும் நண்பேன்டா என்றும் எல்லாம் சூப்பர் ஸ்டார் மகளுக்காக என்றும் கமெண்ட் போட்டு வருகிறர்கள்.


Click it and Unblock the Notifications











