Rajinikanth: அடுத்த ஆண்டில் துவங்கும் ஜெயிலர் 2 பட சூட்டிங்.. நெல்சன் இப்ப எங்க இருக்காரு தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டை கொடுத்தது. முன்னதாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் அவருக்கு சொதப்பலாக அமைந்த நிலையில், ஜெயிலர் படம் மிகச் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடிக்க ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முதல் பாகத்தை காட்டிலும் மிகப்பெரிய மாஸான ஸ்கிரிப்டில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக தற்போது நெல்சன் திலீப்குமார் ஸ்கிரிப்ட் வேலைகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்ணா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கவில்லை. இதையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்தப் படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்து நடித்திருந்தனர். படத்தில் தன்னுடைய மகனின் இறப்பிற்கு காரணமானவர்களை பழி வாங்குவதாக ரஜினியின் கேரக்டர் அமைந்திருந்தது.
ஜெயிலர் படம்: முன்னாள் ஜெயிலரான அவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன்தான் குற்றவாளி என்று தெரிய வரும்போது என்ன மாதிரி முடிவெடுக்கிறார் என்பதாக ஜெயிலர் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப்படம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் சிறப்பாக கவர்ந்து நல்ல விமர்சனங்களையும் வசூலையும் வாரி குவித்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ரிட்டையர்டு ஜெயிலராக தன்னுடைய சாந்தமான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை ரஜினிகாந்த் வெளிபடுத்தி இருந்தார்.
ஜெயிலர் 2 படம்: இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்களின் கேள்வி தொடர்ந்து வந்தது, இதனிடையே ஜெயிலர் 2 படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது நெல்சன் திலிப்குமார் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்த மிர்ணா தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மைசூரில் நெல்சன் திலீப்குமார்: ஜெயிலர் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக தன்னுடைய டீமுடன் மைசூரில் நெல்சன் திலீப்குமார் செயல்பட்டு வருவதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை படக்குழுவினர் அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் பாகத்தை போலவே இந்த படமும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப முதல் பாகத்தை காட்டிலும் இந்த பாகத்தை மிகவும் வலிமையான ஸ்கிரிப்ட்டுடன் நெல்சன் திலீப்குமார் அணுக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதிரடி ஆக்ஷன் படம்: முதல் பாகத்தில் ரஜினியின் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை மிகவும் சிறப்பாக என்டர்டெயின் செய்த நிலையில் அதை விட சிறப்பாக 2வது பாகம் அமைய உள்ளதாக நெல்சன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். வரும் ஏப்ரல் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் அவர் இணையுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த உடன் அடுத்த ஆண்டில் நெல்சன் இயக்கத்தில் இணைகிறார் ரஜினிகாந்த். இந்தப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











