ஊக்கம் கொடுத்த விஜய்... அடித்த பம்பர் பரிசு... நெல்சன் பகிர்ந்த ரகசியம்

சென்னை : கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை அடுத்து தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். அடுத்ததாக சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது. தற்போது விஜய் மற்றும் பீஸ்ட் படம் குறித்து பல விஷயங்களை வார இதழ் ஒன்றில் பகிர்ந்துள்ளார் நெல்சன்.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை அடுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

ஏப்ரல் 2ம் தேதி ட்ரெயிலர்

ஏப்ரல் 2ம் தேதி ட்ரெயிலர்

அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பாடல்களின் வியூஸ் கோடிக்கணக்கில் சென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

படத்தின் ட்ரெயிலருக்காக தொடர்ந்து ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்த நிலையில் தற்போது ட்ரெயிலர் ரிலீசாக உள்ளது ரசிகர்களை தாறுமாறு கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் தனக்கும் விஜய் சாருக்கும் சிறப்பான கெமிஸ்ட்ரி உருவானதாக நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் பேட்டி

நெல்சன் திலீப்குமார் பேட்டி

பீஸ்ட் படம் மற்றும் விஜய் குறித்த தகவல்களை அவர் வார இதழ் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தப்படம் தனது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் போல இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக ஆக்ஷன் காமெடி படமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களை காப்பாற்றும் விஜய்

மக்களை காப்பாற்றும் விஜய்

ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு ஆபத்தில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்ற ஒற்றை வரிக்கதைதான் இது. ஆனாலும் அது எப்படி கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதுதான் சுவாரஸ்யம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் சார் சூட்டிங்கில் இயல்பாக இருந்ததாகவும் தன்னுடைய வேலைகளை எளிமைப்படுத்தியதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஊக்கம்

விஜய்யின் ஊக்கம்

சூப்பர்ஸ்டாரின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளார் நெல்சன். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், விஜய் சார்தான், ரஜினிக்கு கதை சொல்ல தன்னை ஊக்குவித்ததாகவும் உண்மையை போட்டு உடைத்துள்ளார். தனக்குள் இருந்த தயக்கத்தை உடைத்து அவர் தனனை மிகவும் மோட்டிவேட் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைரலான பேட்டி

வைரலான பேட்டி

படம் வரும் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. நாளை மறுநாள் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், நெல்சன் படம் குறித்தும் விஜய் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X