“இவன் சொன்னான்னு வந்தேன்... இவன் மூஞ்சிய பாருங்க சார்“…Beast Public Review!

சென்னை : கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட்.

Recommended Video

Beast FDFS Audience OPINION | Thalapathy | Nelson | Theatre Response | Filmibeat Tamil

இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் பாலாபிஷேகம், பட்டாசு வெடித்து திருவிழாப்போல கொண்டாடினர். இத்திரைப்படம் குறித்து பொதுமக்கள் என்ன சொல்லியிருக்காங்கனு பார்க்கலாமா?

இவன் சொன்னான்னு வந்தேன்

இவன் சொன்னான்னு வந்தேன்

படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, இதோ இவன் சொன்னான்னு படம் பார்க்க வந்தேன்... இவன் மூஞ்சிய பாருங்க. படத்துல கதையே இல்லை. படத்தின் முதல் பாதியில் லாஜிக்கே இல்லை என்று விஜய்யின் தீவிர ரசிகர்கள் முகத்தை சோர்வாக வைத்துக்கொண்டு கூறியுள்ளனர்.

குழந்தைகள் பார்ப்பார்கள்

குழந்தைகள் பார்ப்பார்கள்

நெல்சனின் காமெடி சென்ஸ் பக்காவாக ஒர்க்அவுட்டாகி உள்ளது. செம காமெடி குடும்பத்தோடு படத்தை பார்க்கலாம், குழந்தைகள் படத்தை கொண்டாடுவார்கள். தளபதி வேறமாதிரி டான்ஸ் ஆடி இருக்காரு, பூஜா ஹெக்டே அழகாக இருக்காங்க. தளபதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்காரு, தளபதிக்காக படத்தை பார்க்கலாம்.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

விஜய்யின் பில்டப் ரொம்ப ஓவரா இருந்தது, ஒரு காட்சியில் பில்டப்னா ஓகே எல்லா இடத்திலும் பில்டப்னா ரொம்ப போரீங்கா இருந்தது. படத்துல ஒன்னுமே இல்லை, சொல்றதுக்கும் ஒன்னுமே இல்லை. அனிருத்தின் இசை,விஜய்யின் டான்ஸ்க்காக படத்தைப்பார்க்கலாம்.

சர்வதேச அளவு ஸ்டன்ட்

சர்வதேச அளவு ஸ்டன்ட்

அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய்யின் அபாரமான நடன அசைவுகள் வெறித்தனம் என ரசிகர்கள் பாராட்டினர். ஆரம்பத்தில் இருந்தே அன்பறிவு மாஸ்டரின் ஸ்டன்ட் வெறித்தனம் என்றும் சர்வதேச அளவில் உள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மால் சீன் மொக்கை

மால் சீன் மொக்கை

படம் சுமார் தான், விஜய்யின் படத்தில் நாங்கள் எதிர்பார்த்த விறுவிறுப்பு ஒரு பயர் இல்லை படம் ரொம்ப ஸ்லோவா போகுது. விஜய் ஆக்ஷன் அதிகமான இருக்கு விஜய்யை மாஸா காமிச்சி இருக்காங்க, மத்தபடி படத்தின் கதை ஒன்னுமே இல்லை, மால் சீன் செம மொக்கை என்று பொதுமக்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X