Director Nelson dilipkumar: இன்னும் இரு மாதங்களில் அடுத்தப்பட அறிவிப்பு.. நெல்சன் கூல் ஸ்பீச்!

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தன்னுடைய சிறப்பான ஸ்கிரிப்டால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தையும் வெற்றிப்படமாக்கியிருந்தார். இதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் சொதப்பலாகவே அமைந்தது. ஆனாலும் விஜய் ரசிகர்களை கவர்ந்து இந்தப் படம் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார் நெல்சன் திலீப்குமார்.

பீஸ்ட் படத்தின் தோல்வியையடுத்து, ஜெயிலர் படத்தை அவர் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து ரஜினிகாந்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கத்திலேயே தொடர்ந்து. இந்தப் படத்தை சந்தேகத்துடனேயே ரசிகர்கள் எதிர்கொண்டனர். ஆனால் நினைத்ததற்கு மாறாக படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படத்தில் ரஜினியின் நடிப்பு, சக நடிகர்களின் கேமியோ ரோல்கள், அனிருத் இசை என அனைத்துமே மாஸாக அமைந்து படத்தின் வசூலை 600 கோடி ரூபாய்களை தாண்ட செய்தது.

Director Nelson Dilipkumar updates about his next movie and says official announcement will come in another 2 months

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்த தன்னுடைய படங்களால் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பட இயக்குநராக கோலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்த அவர், முதல் படத்திலேயே நயன்தாரா, யோகிபாபு கூட்டணியில் படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் படத்தை மேலும் சிறப்பாக்கினார் நயன்தாரா. யோகிபாபுவின் டைமிங் காமெடியும் படத்திற்கு வலு சேர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.

விஜய் -நெல்சன் காம்பினேஷன்: இந்தப் படங்களை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஆனால் இந்தப் படம் சொதப்பியது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே நடிகர் ரஜினிகாந்தின் படத்தை இயக்க கமிட்டானார் நெல்சன். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் அவர் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் அவரையே இந்தப் படத்தின் இயக்குநராக ரஜினியும் சன் பிக்சர்சும் ஃபிக்ஸ் செய்தனர். இந்தப் படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டது.

ஜெயிலர் படத்தின் வரவேற்பு: படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். துவக்கத்தில் ரிடையர்ட் ஜெயிலராக எளிமையான ரஜினிகாந்தை காட்டிய நெல்சன், அடுத்தடுத்து அவரது கேரக்டரின் மாற்றம் படத்தில் மாஸாக காட்டப்பட்டிருந்தது. அவருக்கு படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், உள்ளிட்டவர்கள் உதவுவதாக காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளும் படத்தின் சிறப்பிற்காக காரணமாக அமைந்தது. இந்நிலையில் படத்தில் ரஜினியின் ஸ்மோக்கிங் ஷாட் தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று சமீபத்திய பேட்டியில் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். இந்தக் காட்சியை அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களின் தாக்கத்தில் தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் இரு மாதங்களில் அடுத்தப்பட அறிவிப்பு: தொடர்ந்து பேசிய நெல்சன் திலீப்குமார் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய அடுத்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய அடுத்தப்படம் ஜெயிலர் 2 என்பது குறித்து தற்போது வரை தெரியவில்லை என்றும் அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த அறிவிப்புதான் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X