Nelson dilipkumar: ஜெயிலர் பட சக்சஸ்.. முன்னதாக கணித்த விஜய்.. நெல்சன் நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜெயிலர் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் வெளியான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன். ஆனால் அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

Director Nelson hails Vijay and his prediction about Rajinis Jailer movie success

ஜெயிலர் வெற்றி குறித்து முன்கூட்டியே விஜய் கணித்ததாக நெல்சன் நெகிழ்ச்சி: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் அவருக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். அவரது கடத்தல் மற்றும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் ரஜினி எத்தகைய எக்ஸ்பீரியன்ஸ்களை சந்திக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாகியிருந்தது.

ரஜினி தன்னுடைய மகனை மீட்கும் பயணத்தில் அவருக்கு உதவியாக இருக்கும் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் மற்றும் மோகன்லால் ஆகியோருக்கும் படத்தில் சிறிய கேரக்டர்களாக இருந்தபோதிலும் அவர்களை சிறப்பாக பயன்படுத்தி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நெல்சன். அதேபோல தமன்னா, சுனில், வசந்த்ரவி உள்ளிட்டவர்களுக்கும் படத்தில் சிறப்பான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. வில்லனாக விநாயகன் மிரட்டியிருந்தார்.

Director Nelson hails Vijay and his prediction about Rajinis Jailer movie success

படத்தின் நாயகனாக தன்னுடைய தோள்களில் முழு கதையையும் சுமந்திருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அவரது ஸ்டைல் உள்ளிட்டவை வழக்கமான ஸ்கோர் செய்திருந்தன. படத்தின் டயலாக்குகளும் மாஸாக அமைந்தது. இதேபோல படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது இசையமைப்பாளர் அனிருத்தான். படத்தில் பாடல்களில் மட்டுமின்றி, பிஜிஎம்மிலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தார் அனிருத். காவாலா, ஹுகும் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

இந்தப்படம் தொடர்ந்து இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல் 600 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கலவையான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் வசூல் 500 கோடிகளை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டது.

Director Nelson hails Vijay and his prediction about Rajinis Jailer movie success

இந்தப் படம் இயக்குநர் நெல்சனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், விஜய்யுடன் நெல்சன் இணைந்திருந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் இந்தப் படம் சிறப்பாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில்தான் ஜெயிலர் படத்தை இயக்கினார் நெல்சன். ஆனால் பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்கு மௌனம் காத்த நெல்சன், ஜெயிலர் படத்தில் சொல்லாமல் அடித்ததாக பாராட்டுக்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று 6 மாதங்களுக்கு முன்னதாகவே நடிகர் விஜய் கணித்ததாக நெல்சன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் விடிவி கணேஷிடம் கூறியதாகவும், அவர் அதை தன்னிடம் பெருமையுடன் பகிர்ந்ததாகவும் நெல்சன் கூறியுள்ளார். முன்னதாக பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட, தன்னை தேற்றும்வகையில் விஜய், தொடர்ந்து கால் செய்தும், வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுடம் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும் நெல்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X