Nelson Dilipkumar: பீஸ்ட் படத்துல என்னோட கணக்கு தப்பா போயிடுச்சு.. நெல்சன் வருத்தம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தையும் நெல்சன் இயக்கியிருந்த நிலையில், அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது ஜெயிலர் படத்தின் சக்சஸ் மூலம் தன்னை நிரூபித்துள்ள நெல்சன், பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்கள் குறித்து தற்போது பேசியுள்ளார்.

Director Nelson opens up about the failure of Vijays Beast movie

விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து மனம்திறந்த நெல்சன்: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்து கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். இந்தப்படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்துள்ளார் ரஜனிகாந்த். அவருக்கு ஜோடியாக படையப்பா படத்தை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் படத்தில் தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். அதிரடி சரவெடியாக வெளியான ஜெயிலர் படம் சர்வதேச அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பான சாதனை படைத்து வருகிறது. இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனாக 375 கோடி ரூபாயை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் இன்னும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு முன்னணி நடிகரை இணைத்துள்ளார் நெல்சன். அவர்கள் அனைவருக்குமே சமமான கேரக்டர்கள் படத்தில் அமைந்திருந்தது சிறப்பானதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற படத்தின் நடிகர்கள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நெல்சன், படம் தான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாக அமைந்ததாக ரஜினி பாராட்டியதை பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து அவர் முன்னதாக இயக்கியிருந்த விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறித்து பேசினார்.

பீஸ்ட் படத்தை இயக்குவதற்கு தனக்கு 6 -7 மாதங்கள் டைம் கிடைத்ததாகவும் தான் அந்தப் படத்தின் ஸ்கிரீன் ப்ளேவை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தான் பீஸ்ட் படத்தை இயக்க திட்டமிட்டதாகவும் ஆனால் தன்னுடைய கணக்கு தவறிவிட்டதாகவும் நெல்சன் தெரிவித்துள்ளார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தன்னை அனைத்தையும் ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் நெல்சன் கூறியுள்ளார்.

படத்தில் இணைக்கப்படாமல் பல காட்சிகள் உள்ளதாகவும் அவற்றையெல்லாம் சரியாக எடுத்து சிறப்பான ஸ்கிரிப்டை தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் நெல்சன் மேலும் கூறினார். இந்தப் படத்தில் தான் போட்ட கணக்கு தவறியதாகவும் தொடர்ந்து நெல்சன் கூறினார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக அமைந்தும் பல காட்சிகள் விமர்சனங்களை எழுப்பின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X