ஒரு பக்கம் ஆக்ஷன்… ஒரு பக்கம் காமெடி.. ‘பீஸ்ட்‘ இந்திய ஜேம்ஸ் பாண்ட் படம்!
சென்னை : நெல்சன் திரைப்படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு உதாரணமாக இவரின் முந்தைய படங்களை சொல்லலாம். ஆனால், பீஸ்ட் திரைப்படத்தில் தாறுமாறான ஆக்ஷன் இருப்பதுதாக கூறியுள்ளார் நெல்சன்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட். இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் ரசிகர்கள் முன்பதிவை தொடங்கி இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

மாஸ் டிரைலர்
பீஸ்ட் டிரைலருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இதில், செல்வராகவனின் வசனங்கள் ட்ரெய்லரில் தெறிக்கவிட்டது. இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிப்பார் என்று தகவல்கள் வந்தன. ஆனால், செல்வராகவன் அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக நடித்துள்ளார். டிரைலரில் துப்பாக்கி சுடும் காட்சிகளும் ஜெட் விமானத்தை விஜய் இயக்கும் காட்சிகளும் மாஸாக அமைந்துள்ளது.

வீரராகவன்
ஒரு மாலுக்குள் தீவிரவாதிகள் புகுந்துக்கொண்டு, அந்த மாலில் இருப்பவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொள்கிறார்கள். அவர்களை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப் போராடும் வீரராகவனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் 3 சிங்கில் பீஸ்ட் மோடு திரை தீப்பிடிக்கும் பாடல் இன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

மறுபட்டு இருக்கும்
பீஸ்ட் திரைப்படம் 13ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் நெல்சன் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், விஜய்யை மனதில் வைத்துத்தான் பீஸ்ட் படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். எனது முந்தை படங்களில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் ஆக்ஷன் இருக்காது. ஆனால், பீஸ்ட் படத்தில் ஒரு பக்கம் நகைச்சுவை... ஒரு பக்கம் ஆக்ஷன் எனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்றார்.

இது இந்திய ஜேம்ஸ்பாண்ட்
பீஸ்ட் டிரைலரை பார்த்து விட்டு பலர் ஹாலிவுட் படம் போல் இருப்பதாக கூறினனார். இது இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம் என்று சொல்லலாம். விஜய்யின் ஆக்ஷனும், ஸ்டைலும் அந்த அளவுக்கு இருக்கும். விஜக் இயல்பில் எப்படி எதார்த்தமாக இருப்பாரே அப்படி இந்த படத்தில் இருப்பார் என்றார்.
Recommended Video

பிரம்மாண்டமான செட்
மக்கள் நெருக்கடி மிகுந்த ஷாப்பிங் மாலில் நடக்கும் கடத்தல் கதை என்பதால், இந்த படத்திற்காக 60 உயரத்திற்கு பிரம்மாண்டமாக செட் போட்டுள்ளோம். இந்த செட்டை பார்த்துவிட்டு விஜயே வியந்து போனார். அது செட் போலவே தெரியவில்லை. உண்மையான ஷாப்பிங் மால் போன்றே இருந்தது. இதற்காக ஆர்ட் டைரக்டர் கிரண் மிகவும் சிரமப்பட்டார். அனைத்து ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார் நெல்சன்.


Click it and Unblock the Notifications











