பீஸ்ட் 100 நாள் சூட்டிங் கொண்டாட்டம்.. திடீரென தளபதி தரிசனத்தை காட்டி ரசிகர்களை திணறடித்த நெல்சன்!
சென்னை: பீஸ்ட் படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் இப்போதைக்கு தராது என ரசிகர்களே அதை கேட்பதை கைவிட்ட நிலையில், தளபதி ரசிகர்களுக்காக சூப்பரான பட ஸ்டில்லை ஷேர் செய்துள்ளார் இயக்குநர் நெல்சன்.
பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு கொண்டாட்டம் என இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தளபதி தரிசனம் திடீரென கிடைத்த நிலையில் விஜய் ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

கண்டுக்காத சன் பிக்சர்ஸ்
அண்ணாத்த படம் ரிலீஸ் ஆன பின்னர் அடுத்ததாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் புரமோஷனை சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தது. தளபதி விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டு ட்வீட்களை தெறிக்கவிட்ட நிலையிலும், தீபாவளி முதலே அதை சன் பிக்சர்ஸ் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை.

நெல்சனே கொடுத்துட்டாரு
இந்நிலையில், தளபதி ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு செல்ல பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சனே அதிரடியாக பீஸ்ட் படத்தின் பிரத்யேக காட்சியை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் உடன் யாரெல்லாம் நடித்திருக்காங்க என்கிற விபரமும் இந்த புகைப்படத்தில் தெளிவாக இடம்பெற்று இருக்கிறது.

100வது நாள் கொண்டாட்டம்
பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 100 நாட்கள் நிறைவடைந்து விட்டதாகவும் 100வது நாள் கொண்டாட்டம் என செம ஜாலியான ஒரு புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

டிரம்ஸ் வாசிக்கும் தளபதி
ஜாலியாக டிரம்ஸ் வாசித்துக் கொண்டு ஒட்டுமொத்த படக்குழுவினருடன் நடிகர் விஜய் இருக்கும் செம மாஸான புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் ஷேர் செய்ய தளபதி ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். அடிக்கடி இப்படி நீங்களே அப்டேட் கொடுத்துடுங்க தலைவா என நெல்சனை கொண்டாடி வருகின்றனர்.

யாரு ஹீரோயின்
பூஜா ஹெக்டே விஜய்க்கு பின்னாடி பாட்டு பாடுவதுமாக அபர்ணா தாஸ் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பது போலவும் அந்த காட்சியில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இதில் யாரு ஹீரோயின் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். பூஜா ஹெக்டேவை விட அபர்ணா தாஸ் சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

டாக்டர் நடிகர்கள்
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் பார்த்த பாதி நடிகர்கள் அப்படியே தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இருக்கிறார்களே என இந்த புகைப்படத்தை ஜூம் செய்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ரெட்டின் கிங்ஸ்லி, வைபவ் அண்ணன் சுனில் ரெட்டி என ஏகப்பட்ட பேர் இந்த ஒரே ஒரு புகைப்படத்தில் உள்ளனர்.

காமெடிக்கு கியாரண்டி
கோலமாவு கோகிலா, டாக்டர் பட வரிசையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் காமெடிக்கு செம கியாரண்டி என்பது இந்த ஒரு ஸ்டில்லை பார்த்தாலே தெரிகிறது என தளபதி ரசிகர்கள் கமெண்ட்டை போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











