Farhana - தயவு செய்து பாருங்கள்.. பத்திரிகையாளர் சந்திப்பில் கெஞ்சிய ஃபர்ஹானா இயக்குநர்
சென்னை: Farhana (ஃபர்ஹானா) இஸ்லாமிய சகோதரர்கள் தயவு செய்து ஃபர்ஹானா படத்தை பாருங்கள் என இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் நெல்சன் வெங்கடேசன். அவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஃபர்ஹானா'. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

படத்துக்கு வந்த எதிர்ப்பு: ஃபர்ஹானா ட்ரெய்லர் வெளியானதை அடுத்து இஸ்லாமியர்களை புண்படுத்தும் நோக்கில் படமாக்கப்பட்டுள்ளதாக ஒரு தர்ப்பினர் கடும் எதிர்ப்பை முன்வைத்தனர். அப்படி எந்த காட்சியும் படத்தில் இல்லை என படக்குழு தொடர்ந்து சொன்னது. ஆனால், படத்தை வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்பும் ஒரு பக்கம் வலுத்துக்கொண்டே சென்றது. இருப்பினும் தடைகளை தாண்டி நேற்று படம் ரிலீஸானது,. படத்துக்கு ரசிகர்கள் ஓரளவு டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
பரிசுத்தமான மனதுடன் அணுகிய நெல்சன்: இந்நிலையில் படம் குறித்தும், படத்துக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் நெல்சன், "நான் இந்த படத்தின் கதையை பரிசுத்தமான மனதுடன் அணுகினேன். இதில் இம்மியளவும் நம்முடன் வாழக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களை தவறாக காட்டிவிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தேன். நான் அப்படிப்பட்ட இயக்குநர் கிடையாது. ஆனால் நேற்று ஒரு குறிப்பிடத்த திரையரங்கில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டது.
ரொம்பவே வருத்தம்: அதனை சில ஊடகங்கள் தமிழ்நாடு முழுவதும் 'ஃபர்ஹானா' படக்காட்சிகள் ரத்து என செய்தி வெளியிட்டிருந்தன. இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நல்ல படங்களைதான் இயக்குவேன் என வைராக்கியத்துடன் இருக்கிறேன். நல்ல படங்களை சமூக அக்கறையுடன் வெளியிடும் நிறுவனம்தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது வரும் படங்களின் ஆயுள் என்பது இரண்டு முதல் மூன்று வாரங்கள்தான்.. 'ஃபர்ஹானா' மாதிரியான படங்கள் சராசரி பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுபவை.

நான் எடுக்காமல் யார் எடுப்பார்கள்: இந்த படத்தின் சர்ச்சைக்கு காரணம் நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை தொட்டு படத்தை இயக்கிவிட்டேன் என்பதால்தான். என் சகோதர, சகோதரிகளைப்பற்றி நான் படம் எடுக்காமல் வேறு யார் எடுப்பார். இஸ்லாமிய சமூகத்தை பற்றிய நல்ல படங்களுக்கு ஃபர்ஹானா ப்டம் ஆரம்ப புள்ளியாக இருக்கட்டும். என்பது எனது 'ஃபர்ஹானா' படம் ஆரம்ப புள்ளியாக இருக்கட்டும்.
தயவு செய்து படத்தை பாருங்கள்: இஸ்லாமிய நண்பர்கள் தயவு செய்து படத்தைப்பாருங்கள். பார்த்துவிட்டு குறைகள் இருந்தால் சொல்லுங்கள். அதனை நாங்கள் திருத்திக்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். தமிழ் திரையுலகில் இனி இஸ்லாமிய சகோதரர்களை சரியாக சித்தரிக்கும் படங்கள் வர வேண்டும். அதற்கு ஆரம்பமாக 'ஃபர்ஹானா' இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை" என்றார்.


Click it and Unblock the Notifications











