ஸ்கிரிப்ட்டில் இல்லாததையும் திரையில் கொண்டுவந்த விஜய் சேதுபதி.. உணர்ச்சிவசப்பட்ட நிதிலன் சாமிநாதன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது மகாராஜா படம். இந்த படத்தை தன்னுடைய இயல்பான நடிப்பால் சிறப்பாக்கியிருந்தார் விஜய் சேதுபதி. படத்தில் விஜய் சேதுபதியுடன் அபிராமி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இயக்குனர் நிதிலன் சாமிநாதனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ள நிதிலன் சாமிநாதன் தன்னுடைய இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான குரங்கு பொம்மை மற்றும் மகாராஜா படங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Vijay Sethupathi Maharaja movie

மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த மாதத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது மகாராஜா. முன்னதாக குரங்கு பொம்மை என்ற படத்தில் மூலம் ஏராளமான ரசிகர்களை விமர்சகர்களை கவர்ந்திருந்த இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் 2வது படமாக மகாராஜா படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் காணாமலே போன நிதிலன் சாமிநாதனுக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜாவை மறக்க முடியாத படமாக மாற்றி உள்ளார் நிதிலன் சாமிநாதன்.

நிதிலன் சாமிநாதன்: மகாராஜா படம் குறித்து அவர் முன்னதாக புரமோஷன்களின்போதும் படத்தின் ரிலீசை தொடர்ந்தும் பல பேட்டிகளில் பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபல நிகழ்ச்சியான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியிலும் பங்கேற்ற நிதிலன் சாமிநாதன் படம் குறித்து பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்று பாகங்களாக இவரது பேட்டி அடுத்தடுத்து சில தினங்கள் இடைவெளியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவரது பேட்டியின் 3வது பாகம் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் அடுத்தடுத்த தன்னுடைய ஆச்சரியத்தை பகிர்ந்து வருகிறார் நிதிலன் சாமிநாதன்.

விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ச்சி: நடிகர் விஜய் சேதுபதி படத்தில் ஒரு சமையல் காட்சியில் நடித்திருந்ததாகவும் திடீரென அடுப்பில் வைத்த பொருள் பொங்கிய நிலையில் உடனடியாக தன்னுடைய தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து அவர் அந்த பாத்திரத்தை கையாண்டதாகவும் இதெல்லாம் தான் எழுதிய ஸ்கிரிப்டில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் எப்போதுமே மிடில் கிளாஸ் மக்களுக்கான கதைகளை படங்களாக கொடுத்து வருவதாகவும் அதனால் அந்த வாழ்க்கையை வாழ்ந்த விஜய் சேதுபதி, இத்தகைய காட்சிகளில் சிறப்பாக பொருந்தியதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கண்ணீர்விட்ட பாரதிராஜா: இதனிடையே விஜய் சேதுபதியின் மகள் குறித்த காட்சி ஒன்றின் நடித்த இயக்குனர் பாரதிராஜா கிளிசரின் எதுவும் போடாமலே இயல்பாகவே கண்ணீர் விட்டு அழுததாகவும் அதை பார்த்து தனக்கு மிகவும் கஷ்டமாக போய் அவரை கட்டி அணைத்து கொண்டதாகவும் நிதிலன் சாமிநாதன் மேலும் கூறியுள்ளார். இதனிடையே அனுராக் காஷ்யப் குறித்தும் பல விஷயங்களை நிதிலன் பகிர்ந்து கொண்டுள்ளார். மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப்பின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்ற நிலையில் அவரது பல படங்களின் காட்சிகளை சொல்லி அவரிடம் இருந்து தான் வேலை வாங்கியதாக நிதிலன் குறிப்பிட்டுள்ளார்.

காட்சிக்கு வலுசேர்த்த அனுராக்: ஆனால் ஒரு காட்சியில் அந்த காட்சியின் தன்மையை பார்த்து விட்டு அவரே தானாக பின்வாங்கி நடப்பதாக நடித்ததாகவும் இதுவும் தன்னுடைய ஸ்கிரிப்டில் இல்லாத நிலையில், அந்தக் காட்சி சிறப்பாக அமைந்ததாகவும்நிதிலன் கூறியுள்ளார். அந்த காட்சிக்கு அனுராக்கின் இந்த நடிப்பு மிகப்பெரிய வலுவை கொடுத்ததாகவும் நிதிலன் சாமிநாதன் அடுத்தடுத்த நடிகர்கள் குறித்த தன்னுடைய அனுபவங்களை இயக்குநர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X