அந்த ரோலில் சிங்கம்புலி தான் வேண்டும் என்று அழுது அடம் பிடித்தேன்.. மகாராஜா பட இயக்குநர் பேச்சு!
சென்னை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கிறது மகாராஜா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலெக்ஷனை அள்ளி வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர், இப்படத்தில் சிங்கம்புலி நெகடிவ் ரோலில் நடித்து இருக்கிறார். அந்த கேரக்டரில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று அழுது அடம் பிடித்தேன் என்று பேசி உள்ளார்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இந்த படம் மூலமாகவும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதியை தொடர்ந்து மம்தா மோகன்தாஸ், நட்டி, பாரதிராஜா, சிங்கம்புலி, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூல் வேட்டையும் செய்து வருகிறது. ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 45 கோடி வரை வசூலித்துள்ளது. படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

நித்திலன் சுவாமிநாதன்: இந்நிலையில் மகாராஜா படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் : நித்திலன் சுவாமிநாதன், மகாராஜா படம் வெற்றி அடைந்ததற்கு காரணம் நீங்க தான், சின்ன சின்ன யூடியூப் சேனல் கூட என் படத்தை புகழ்ந்து விமர்சனம் செய்து இருந்தார்கள். அது மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்திலும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார்கள். படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து அனைவரும் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்கள், அது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. மேலும், படம் தொடர்பாக சிலருக்கு மாற்று கருத்து இருந்தது. அவர்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எது எனக்கு சரி என்று பட்டதோ அதை நான் எடுத்துக்கொண்டு என்னுடைய அடுத்த படத்தில் சரி செய்து கொள்கிறேன்.
அழுது அடம்பிடித்தேன்: இந்த படத்தில் சிங்கம் புலியை ஏன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு ஒரு காரணம் இருக்கு. தொப்பி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன் அப்போது, அங்கு இருந்த தொகுப்பாளினி போகிற போக்கில் அடுத்து சிங்கம்புலி பேசுவார் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அப்போது பேசிய அவர், நான் அஜித்தை வைத்து ரெட் படம் எடுத்து இருக்கிறேன், சூர்யாவை வைத்து மாயாவி படம் எடுத்து இருக்கிறேன், பாலாவுடன் பல படத்தில் வேலை செய்து இருக்கிறேன் என்று தனது சினிமா பயணம் குறித்து பேசிட்டு, என்னை போகிற போக்கில் சிங்கம்புலி பேசுவார் என்று சொல்லிவிட்டு போகிறார் என்றார்.
வீண் போகவில்லை: அதாவது தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அடக்கிவைத்துவிட்டு, அப்படியே எதார்த்தமாக பேசினார். அன்று அவர் பேசியவிதம் எனக்கு பிடித்துவிட்டதால், மகாராஜா படத்தில் அந்த கேரக்டரில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அவரிடம் சொன்னேன். பின் அவரிடம் அழுது அடம்பிடித்து அவரை அந்த படத்தில் நடிக்கவைத்தேன். நான் அடம்பிடித்தது வீண் போகவில்லை என்பதை படத்தில் அவரின் நடிப்பை பார்த்து உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று இயக்குநர் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











