மகாராஜா படத்துக்காக இயக்குநர் நிதிலனுக்கு கிடைத்த பரிசு.. இவ்ளோ காஸ்ட்லி கிப்ஃட்டா?
நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் அவரது 50வது படமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த நிலையில் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் இந்த படம் அதிரடியை கிளப்பியது.
இந்நிலையில் இந்த படம் 50 நாட்களை தாண்டி திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில் படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இதனிடையே, படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு தயாரிப்பு தரப்பு விலை உயர்ந்த பரிசை தற்போது கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது மகாராஜா. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கட்டிப்போட்ட நிலையில் படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையில் நடக்கும் பிணைப்பை இந்த படத்தின் கதைக்களம் மையமாகக் கொண்டிருந்தது. படத்தில் விஜய் சேதுபதியுடன் அபிராமி, சச்சனா உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
மகாராஜா படம்: இந்த படம் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏராளமான ரசிகர்களை அதிர செய்த நிலையில் படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவுடன் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவான மகாராஜா படம், மிகப்பெரிய அளவில் வசூலை தயாரிப்பாளர்களுக்கு ஈட்டி கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும்வகையில் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் படத்தின் இயக்குநர் நிதிலன் சாமிநாதனுக்கு தற்போது விலை உயர்ந்த கார் ஒன்றைய பரிசாக அளித்துள்ளார்.
விலையுயர்ந்த கார் பரிசு: இது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நிதிலன் சுவாமிநாதன் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் புதிய காரை பெற்றுக் கொள்ளும்படியான புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். முன்னதாக குரங்கு பொம்மை படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்த நிதிலன் சுவாமிநாதனுக்கு இரண்டாவது படமான மகாராஜா மிகவும் அதிரடியாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து அவரது பயணம் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஓடிடியிலும் பெஸ்ட்: கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மகாராஜா படம் வெளியானது. மிகப்பெரிய வரவேற்பை திரையரங்குகளிலேயே பெற்ற இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தியாவில் இந்தப் படத்தை அதிகமானோர் ஓடிடியில் பார்த்த நிலையில், இது சாதனையாகியுள்ளது. மேலும் வெளிநாட்டு ரசிகர்களும் ஓடிடியில் மகாராஜா படத்தை அதிகமாக பார்த்து வருகின்றனர். இதனிடையே, அடுத்ததாக நயன்தாராவை வைத்து நிதிலன் இயக்கவுள்ள படத்தையும் மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











