அதர்வாவை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி.. கௌரவ வேடத்தில் ரஜினி.. விரைவில் அறிவிப்பு?
சென்னை : இயக்குநர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.
தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு இவரை சமூக வலைதளங்களில்தான் அதிகமாக பார்க்க முடிகிறது.
முன்னதாக முஸாபிர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்ட இவர் பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநராக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினி. பின்பு தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் என பிசியான இவர், படங்களை இயக்காமல் குடும்பத்தில் கவனம் செலுத்தினார். இவருடைய படங்களில் திரைக்கதை சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

சமூக வலைதளங்களில் பிசி
இதனிடையே தனுஷுடனான 18 ஆண்டுகள் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிசியாக காணப்பட்டார். முஸாபிர் என்ற இசை ஆல்பத்தையும் வெளியிட்ட ஐஸ்வர்யா, தொடர்ந்து பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

வொர்க் அவுட் வீடியோக்கள்
ஆனால் அந்தப் படம் அறிவிப்போடு எந்தவிதமான அடுத்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, வொர்க் அவுட் வீடியோக்கள், ஆன்மிகம் உள்ளிட்ட விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு ஆக்டிவாக இருந்தார். இதனால் ஏராளமான பாலோயர்களையும் பெற்றார்.

ரஜினியை இயக்க இருந்தாரா?
முன்னதாக தன்னுடைய தந்தையை வைத்து இவர் படமியக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது இவர் அதர்வாவை வைத்து தனது அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதில் ரஜினி முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதர்வாவுடன் கூட்டணி?
தனது முதல் படத்தில் தனுஷை வைத்து படமியக்கிய ஐஸ்வர்யா தொடர்ந்து இரண்டாவது படத்தில் கேம்ப்லிங்கை மையமாக வைத்து கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து படமியக்கினார். இதனிடையே தற்போது அதர்வாவை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











