Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்ன டாடா இயக்குநர்.. விரைவில் அறிவிப்பு!
சென்னை: குறைந்த பட்ஜெட்டில் நிறைவான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க முடியும் என்பதை தொடர்ந்து பல இயக்குநர்கள் குறிப்பாக அறிமுக இயக்குநர்கள் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டில் கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான டாடா படம் மிகச்சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது. விடலை பருவத்தில் பொறுப்பின்மை, தனிமை, குழந்தை வளர்ப்பு என அடுத்தடுத்து ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை இந்தப் படம் பேசியது. அறிமுக படமாக இருந்தாலும் தேர்ந்தெடுத்த கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் கணேஷ் கே பாபு.
படத்தில் ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். இவரது இசையில் பாடல்களும் பின்னணியில் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருந்தன. நகைச்சுவை, சண்டை காட்சிகளும் படத்தில் இயல்பான கலவையாக அமைந்திருந்தன. இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டில் அதிகமான கவனத்தை பெற்றுள்ளார் கணேஷ் கே பாபு. இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. அடுத்ததாக சிறப்பான கூட்டணியில் இணைய அவர் நேரத்தை எதிர்நோக்கியுள்ளார். அடுத்ததாக ஜீவா லீட் கேரக்டரில் நடிக்க லைகா நிறுவனத்திற்காக அவர் படமியக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் கணேஷ் கே பாபு: இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளான படம் டாடா. விடலை பருவத்து காதல், பொறுப்பின்மை, வறுமை, குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். இயல்பான கதைக்களத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்த டாடா படம் கடந்த ஆண்டின் வெற்றிப்படங்களின் வரிசையில் சிறப்பாக இடம்பெற்றது.
டாடா படம்: இந்தப் படத்தில் கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், பாக்கியராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் கதைக்களம் ரசிகர்களை கொண்டாட வைத்து வெற்றிப்படமாக்கியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் கணேஷ் கே பாபு இணையவுள்ளதாகவும் படத்தில் ஜீவா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவரும் நிலையில், விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுடன் சந்திப்பு: இதனிடையே சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை கணேஷ் கே பாபு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் ஒரு கதையை சிவகார்த்திகேயனுக்கு கூறி ஓகே வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்கள் இன்னும் இறுதிச் செய்யப்படாத நிலையில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம். முதலில் ஜீவா அல்லது சிவகார்த்திகேயன் இவர்களில் கணேஷ் யாரை இயக்குவார் என்பது குறித்து தெரியவரும். இயல்பான கதைக்களங்களில் இருவருமே சிறப்பாக நடித்துவரும் நிலையில் கணேஷ் கே பாபு, இவர்களுக்கு எத்தகைய கதைக்களத்தை உருவாக்குவார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏஆர் முருகதாசுடன் இணைந்த சிவகார்த்திகேயன்: தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் எஸ்கே 23 படத்தில் சூட்டிங்கை துவங்கியுள்ளார். அடுத்தடுத்து பிராஜெக்ட்களில் தன்னை கமிட் செய்துவரும் சிவகார்த்திகேயன், பக்கத்து வீட்டு பையன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் டாடா மாதிரியான ஒரு கதைக்களத்தில் கண்டிப்பாக சிறப்பாக பொருந்துவார். எதுவாக இருந்தாலும் இன்னும் சில காலங்கள் பொறுத்திருந்து அவரின் அடுத்தப்பட அறிவிப்பை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











