Director Meera mahadhi: இளம் ஹீரோக்களே கதை கேட்க தயாராக இல்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய இயக்குநர்

சென்னை: டபுள் டக்கர் என்ற உற்சாகமான தலைப்புடன் களமிறங்க உள்ளது இயக்குநர் மீரா மஹதியின் அறிமுகப்படம். இந்த படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கருணாகரன், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏர் ஃபிள்க் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முன்னெடுத்துள்ளனர். முன்னதாக இந்த படத்தில் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அனிமேஷன் கேரக்டர்களை முன்னிலைப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மீரா மஹதி. இவர் குறும்படங்களை இயக்கி அதன் அனுபவத்தில் தற்போது டபுள் டக்கர் படத்தை இயக்கியுள்ளார். எந்த முன்னணி இயக்குனரிடமும் இவர் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இந்தப் படத்தின் இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் கதையை தான் இளம் நடிகர்களுக்கு கூற முற்பட்டபோது ஒரு சாதாரண மனிதனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை கூட தனக்கு அவர்கள் கொடுக்கவில்லை என்று அவர் தனது வருத்தத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

Director of Double tuckerr movie Meera mahadhi expressed his feeling in press meet

டபுள் டக்கர் படம்: இயக்குனர் மீரா மஹதி இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் டபுள் டக்கர். நடிகர் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி மற்றும் பேன்டசி ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது. படத்தில் அனிமேஷன் கேரக்டர்களை முன்னிலைப்படுத்தி திரைக்கதையை அமைத்துள்ளார் மீரா மஹதி. இந்த படத்தில் தீரஜ் தன்னுடைய சிறப்பான மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வித்தியாசமான வகையில் அனிமேஷன் கேரக்டர்களை உருவாக்கி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மீரா மஹதி: இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகியுள்ளதாகவும் ஆனால் வளர்ந்து வரும் நடிகர்கள் தன்னிடம் கதையை கேட்க கூட தயாராக இல்லாமல் தன்னை வெளியேற்றியதாகவும் படத்தின் இயக்குநர் மீரா மஹதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக படத்தின் பாடல், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

நேரடி இயக்குநர்: குறும்படங்களை இயக்கி அவை கொடுத்த அனுபவத்தில் இந்த படத்தை நேரடியாக மீரா மஹதி இயக்கியுள்ளார். எந்த முன்னணி இயக்குனர்களிடமும் அவர் உதவி இயக்குனராக பணியாற்ற வில்லை. இதனிடையே இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மீரா மஹதி, இளம் நடிகர்கள் குறித்த தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து உள்ளார். படத்தின் கதையை கேட்ட தீரஜ், படத்தின் பட்ஜெட்டை 8 மடங்காக உயர்த்தி விட்டதாகவும், மேலும் படததின் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டுகள் இணைந்தவுடன் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பு: இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இயக்குநர் மிஷ்கின் பங்கேற்றார். இதுகுறித்து மீரா மஹதி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். தன்னுடைய முதல் பட பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மிஷ்கின் சார் அமர்ந்துள்ளது தனக்கு பெருமையளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படம் மிகச் சிறப்பாக ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்டுள்ள படத்தின் டீசர் ரசிகர்களை காமெடி கலாட்டா செய்துள்ளது. படத்தில் கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். வித்தியாசாகர் இசையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X