கடவுள் இருக்காரு... வெங்கட்பிரபு ட்வீட்... துவங்கியது மன்மதலீலை புக்கிங்!

சென்னை : நடிகர் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் ரிலீசாக இருந்த மன்மத லீலை படம் காலையில் ரிலீசாகவில்லை. இந்நிலையில் தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஷோ துவங்கியுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

மன்மதலீலை படம்

மன்மதலீலை படம்

நடிகர் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து இன்றைய தினம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது மன்மத லீலை. படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறியுள்ள நிலையில், காலையில் ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் காத்திருந்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் எதிர்பார்த்தபடி படம் ரிலீசாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தலைப்பு தொடர்பாக எழுந்த பிரச்சினையில் படம் ரிலீசாகவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு படம் ரிலீசாவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை வரும் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திரையிடப்பட்ட மேட்னி ஷோ

திரையிடப்பட்ட மேட்னி ஷோ

இந்நிலையில் படம் தற்போது மேட்னி ஷோவிற்கு திரையிடப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் மாலை மற்றும் இரவு ஷோவிற்கு திரையிடப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவும் இதை உறுதி செய்துள்ளார். கடவுள் இருக்கார் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

உற்சாகமான படம்

உற்சாகமான படம்

லாக்டவுன் சமயத்தில் எடுக்கப்பட்ட உற்சாகமான படம் மன்மத லீலை என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைவருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசோக் செல்வன் உறுதி

அசோக் செல்வன் உறுதி

இதனிடையே கதையின் நாயகன் அசோக் செல்வனும் படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு புக்கிங்குகள் துவங்கியுள்ளது குறித்து உறுதி செய்துள்ளார். மேலும் சவால்களை கடந்தபின் கிடைக்கும் வெற்றி இன்னும் இனிமையானது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X