ரூட்டை மாற்றிய புஷ்பா பட இயக்குநர்... ஆகஸ்ட்டில் புஷ்பா 2 படத்தின் சூட்டிங் துவக்கம்!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. வசூல் மழையையும் பொழிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜூன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என வெளியான அனைத்து இடங்களிலும் இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

பான் இந்தியா ஸ்டாரான அல்லு அர்ஜூன்

பான் இந்தியா ஸ்டாரான அல்லு அர்ஜூன்

இதையடுத்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் அல்லு அர்ஜூன். படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு தற்போது விஜய்யுடன் தளபதி 66 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இதேபோல படத்தில் சிறப்பான வில்லனாக மிரட்டியிருந்தார் பகத் பாசில்.

திட்டத்தை மாற்றிய இயக்குநர்

திட்டத்தை மாற்றிய இயக்குநர்

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்த பாகத்திற்கான முன்னேற்பாடுகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் முன்னதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது தன்னுடைய திட்டத்தை மாற்றியுள்ளாராம் புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார்.

கெட்டப்பை மாற்றிய அல்லு அர்ஜூன்

கெட்டப்பை மாற்றிய அல்லு அர்ஜூன்

படத்தில் செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களது வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் கதைக்களத்தை கையாண்டிருந்தார் இயக்குநர் சுகுமார். இந்தக் கேரக்டரை அப்படியே திரையில் கொண்டுவரும் வகையில் தன்னுடைய கெட்டப்பை மாற்றியிருந்தார் அல்லு அர்ஜூன். தன்னுடைய சாக்லேட் பாய் கேரக்டரை இந்தப் படத்திற்காக முழுமையாக மாற்றினார்.

வெற்றியை பரிசளித்த சமந்தா நடனம்

வெற்றியை பரிசளித்த சமந்தா நடனம்

படத்தின் பாடல்களும் படத்தின் வெற்றியை சிறப்பாக தீர்மானித்தன. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தாவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தார். இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைக்கதையில் மாற்றம்

திரைக்கதையில் மாற்றம்

இந்தப் படத்தின் திரைக்கதையிலும் சில மாற்றங்களை மேற்கொள்ள சுகுமார் திட்டமிட்டுள்ளாராம். சமீபத்தில் பிரம்மாண்டமான காட்சிகளுடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள கேஜிஎப் 2 படத்தின் காட்சிகளை போலவே புஷ்பா 2 படத்தின் காட்சிகளையும் மாற்ற அவர் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

DSP Speech in Pushpa Success Meet | Allu Arjun, Rashmika Mandanna
ஆகஸ்ட்டில் சூட்டிங்

ஆகஸ்ட்டில் சூட்டிங்

இதற்கு ஏற்றாற்போல படத்தின் திரைக்கதையிலும் மாற்றத்தை செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இதையடுத்தே படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக புஷ்பா படம் அதிரடியாக ரிலீசான நிலையில், தற்போது அதில் பிரம்மாண்டத்தையும் புகுத்த இயக்குநர் திட்டமிட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X