»   »  முத்தக் காட்சியில் நடித்தது சமந்தா, ஆனால் இயக்குனருக்கு ரூ. 10 லட்சம் பரிசு

முத்தக் காட்சியில் நடித்தது சமந்தா, ஆனால் இயக்குனருக்கு ரூ. 10 லட்சம் பரிசு

Posted By:
Subscribe to Oneindia Tamil
முத்த காட்சிக்காக 10 லட்சம் வாங்கின சமந்தா, ராம் சரண்- வீடியோ

ஹைதராபாத்: ரங்கஸ்தலம் படத்தில் ஒரு முத்தக் காட்சிக்கு தயாரிப்பாளர் ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா, சமந்தா உள்ளிட்டோர் நடித்த ரங்கஸ்தலம் படம் ஹிட்டாகியுள்ளது. படம் வெளியாகிய 10 நாட்களில் உலக அளவில் ரூ. 147 கோடி வசூல் செய்துள்ளது.

வசூல் நிலவரத்தை பார்த்து படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

ராம்சரண் தேஜா

ராம்சரண் தேஜா

ரங்கஸ்தலம் படத்தில் ராம் சரண் தேஜா, சமந்தா நடித்த முத்தக் காட்சி பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பிகினி அல்லது முத்தக் காட்சியில் நடிக்க ஹீரோயின்கள் தான் அதிக பணம் கேட்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக நடந்துள்ளது.

இயக்குனர்

இயக்குனர்

முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதும் ராம் சரண் தேஜா பதட்டமாகிவிட்டாராம். அதனால் சமந்தா ராம் சரண் தேஜாவுக்கு முத்தம் கொடுத்த காட்சியை படமாக்கியபோது அது சரியாக வரவில்லையாம்.

பணம்

பணம்

சமந்தா, ராம் சரண் முத்தக் காட்சி இழுத்துக் கொண்டே போனதை பார்த்த தயாரிப்பாளர் இந்த காட்சியை சீக்கிரம் முடித்தால் உங்களுக்கு ரூ. 10 லட்சம் தருகிறேன் என்று இயக்குனர் சுகுமாரிடம் கூறியுள்ளார்.

ரூ. 10 லட்சம்

ரூ. 10 லட்சம்

தயாரிப்பாளர் கூறிய பிறகு 30 விநாடிகளில் முத்தக்காட்சியை படமாக்கி ரூ. 10 லட்சத்தை பெற்றுள்ளார் இயக்குனர் சுகுமார். அந்த பணத்தை படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டாராம் சுகுமார்.

English summary
Rangasthalam producer has given Rs. 10 lakh to director Sukumar to shoot the kissing scene between Samantha and Ram Charan Teja successfully.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X