“ஆதிபுருஷ் டீசர் பெருமையா தான் இருக்கு”: ட்ரோல்களை கண்டுகொள்ளாத இயக்குநர்… இது பிரபாஸுக்கு தெரியுமா?
ஐதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் கடந்த 2ம் தேதி அயோத்தியில் இருந்து வெளியிடப்பட்டது.
ஓம் ராவத் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில் அதுகுறித்து இயக்குநர் ஓன் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

ஆதிபுருஷ் டீசருக்கு என்னாச்சு?
பாகுபலி படம் வெளியானபோது பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்பட்ட பிரபாஸ், அடுத்தடுத்து கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். பாகுபலிக்கு பின்னர் வெளியான சாகோ, ராதே ஷ்யாம் படங்கள் மரண அடி வாங்கின. இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் டீசர் 2ம் தேதி வெளியானது. இந்தப் படம் 2023 ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

VFX பரிதாபங்கள்
அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசரில் VFX படு மொக்கையாக இருப்பதாக பிரபாஸ் ரசிகர்கள் கொத்தளித்தனர். இன்னொருபக்கம் பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலியோடு கம்பேர் செய்த டோலிவுட் ரசிகர்களை, தமிழ் ரசிகர்கள் வகைவகையாக வறுதெடுத்தனர். அதேபோல், சைஃப் அலிகானை ராவணனாக நடிக்க வைத்ததற்கும் பயங்கரமாக எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல், ஹனுமான் தோல் ஆடை அணிந்திருப்பதா என்றும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி திணறுகிறது ஆதிபுருஷ் டீசர். விஃஎப்க்ஸ் மிக மோசமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இயக்குநர் ஓம் ராவத் விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் ஓம் ராவத் விளக்கம்
ராமாயணம் இழிவுபடுத்தப்பட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் இயக்குநர் ஓம் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், தற்போதைய தலைமுறையினருடன் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவ்வாறு செய்ததாக ஓம் ராவத் கூறியுள்ளார். "எங்கள் தலைமுறைக்கு ராமாயணம் பற்றி அதிகம் தெரியும். ஆனால், இந்தப் புதிய தலைமுறையினருக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாது" எனக் கூறியுள்ளார்.

எனக்கு கவலையில்லை
மேலும், "அதனால் தான் இப்படிப்பட்ட வடிவங்களுடனும் உள்ளடக்கத்துடனும் அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ராம பக்தனாக இதைப் பற்றி எனக்கு பெருமை தான். அடுத்த தலைமுறைகளும் இதை இப்படி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்" எனவும் இயக்குநர் ஓம் ராவத் கூறியுள்ளார். இந்நிலையில் 2டி டீஸர் ஏற்கனவே பல விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், 3டி டீஸரில் படக்குழுவினர் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











