twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா குமார் படம் கைவிடப்பட்டதா... டைரக்டர் என்ன சொல்றார்?

    |

    சென்னை : சிம்பு அடுத்து நடிக்க போவதாக கூறப்பட்ட கொரோனா குமார் படம் பாதியில் கைவிடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது உண்மையா இல்லையா என்பது பற்றி அந்த படத்தின் டைரக்டரே விளக்கம் அளித்துள்ளார்.

    மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்த பிறகு கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படம் பற்றிய அப்டேட்களும் வெளியிடப்பட்டு வந்தன.

    மறுமணத்திற்கு இமான் வைத்த கண்டீஷன்... என்ன இப்படி சொல்லிட்டாரு! மறுமணத்திற்கு இமான் வைத்த கண்டீஷன்... என்ன இப்படி சொல்லிட்டாரு!

    விரைவில் கொரோனா குமார்

    விரைவில் கொரோனா குமார்

    விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் அடுத்த பாகமாக கொரோனா குமார் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தை டைரக்டர் கோகுல் இயக்க உள்ளார். டார்க் காமெடி த்ரில்லர் படமான இதில் சிம்புவிற்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும், வில்லன் ரோலில் ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

    2022ல் இரண்டு சிம்பு படங்கள்

    2022ல் இரண்டு சிம்பு படங்கள்

    சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் கொரோனா குமார் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும். 2022ம் ஆண்டில் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் என இரண்டு சிம்பு படங்கள் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

    என்னது படம் கைவிடப்பட்டதா

    என்னது படம் கைவிடப்பட்டதா

    அதற்குள் சமீபத்தில், மாநாடு படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய சிம்பு, கொரோனா குமார் படத்திற்கு 30 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், இதனால் சிம்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கொரோனா குமார் படம் பாதியில் கை விடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது பற்றி டைரக்டர் கோகுலிடம் மீடியாக்கள் கேட்டதற்கு, அது வதந்தி என தெரிவித்துள்ளார்.

    டைரக்டர் என்ன சொல்றாரு

    டைரக்டர் என்ன சொல்றாரு

    கோகுல் தனது பேட்டியில் கூறுகையில், கொரோனா குமார் படம் ஒரு போதும் கைவிடப்படவில்லை. படத்தின் ஷுட்டிங் மிக விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதனால் படத்தை கைவிடுவது, தள்ளி போடுவது போன்ற எந்த திட்டமும் இல்லை. வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை சிம்பு முடித்ததும் கொரோனா குமார் வேலைகள் துவங்கப்படும். ஷுட்டிங் துவங்கியதும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படும் என்றார்.

    English summary
    In his recent interview, Director Gokul denied the rumours about Simbu's Corona Kumar movie being dropped. He also stated that once Simbu has finished Vendhu Thanindhadhu Kaadu and Pathu Thala, they will begin work on Corona Kumar. After shooting begins, updates will come one by one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X