twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்னி தேவ் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரம் கிடையாது! இயக்குனர் திட்டவட்டம்

    |

    சென்னை: அக்னி தேவ் திரைப்பட வில்லி கதாபாத்திரம் ஜெயலலிதாவை குறிக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஒருநாள் 2 திரைப்படத்தின் இயக்குனர் ஜான் பால் ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இணைந்து இயக்கும் படம் அக்னி தேவ். இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜேம்ஸ் பெஜாய் இசையமைக்கிறார்.

    Director opens about Madhoo character in Agni Dev

    இத்திரைப்படத்தில் அழகன், ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்களில் கலக்கிய மதுபாலா வில்லியாக நடிக்கிறார். இவர் இப்படத்தில் சகுந்தலா தேவி என்ற பெயரில் அமைச்சராக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான அக்னி தேவ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில சந்தேகங்களை எழுப்பியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடுவதுபோல் மதுபாலா கதாபாத்திரம் உள்ளதாக தகவல் பரவியது.

    இயக்குனர் ஜான் பால்ராஜ் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மிக சிறப்பான ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க மதுபாலா காத்திருந்ததாகவும், இந்த கதையை சொன்னதும், இதற்கு முன்பு வில்லியாக நடித்த படையப்பா ரம்யா கிருஷ்ணன், தற்போது நடித்துவரும் வரலட்சுமி போன்றவர்களின் சாயல் இல்லாமல் புதுமையாக இருக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும் சொல்கிறார்.

    "தாசியை ஒழிக்கணும்னு சொன்னா பத்தினிக்கு ஏன் கோபம் வருது".... பழ.கருப்பையா கேள்வி!

    ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு சிலர் ஜெயலலிதாவின் கதாபாத்திரமா எனக் கேட்கின்றனர். நிச்சயமாக இல்லை. ஜெயலலிதா மேடம் மிகவும் மதிப்புக்குரிய அரசியல் தலைவர். அவரை வைத்து மதுபாலாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்படவில்லை. மதுபாலா இன்னும் இளமையோடு தான் இருக்கிறார். மேக்கப் போட்டு கொஞ்சம் வயதானவராக மாற்றினோம் அவ்வளவுதான். எலியும் பூனையும் போல பாபி சிம்ஹாவும் மதுபாலவும் மோதிக்கொள்வர் என சொல்லும் ஜான் பால்ராஜ் இது முக்கிய பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்கிறார்.

    English summary
    Director John Paul Raj explains about Madhoo’s character in Agni Dev movie. He refuses the rumors as the character has connection with former CM Jayalalithaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X