twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஏன் அட்ல்ட் காமெடி வட்டத்திலேயே சுத்திக்கிட்டிருக்கீங்க?'

    By Settu Sankar
    |

    ஹர ஹர மஹாதேவகி என்றொரு படம் கடந்த ஆண்டு வந்தது. கண்டபடி பலரும் திட்டினாலும், படம் கல்லா கட்டியது.

    அதே தயாரிப்பாளர் அந்தப் பாணியில் தொடர்ந்து படங்கள் தர முடிவு செய்துவிட்டார். ஹரஹர மஹாதேவகி இயக்குநர் பி சந்தோஷையே அடுத்த படத்துக்கும் இயக்குநராக்கி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற விவகார தலைப்போடு புதுப்படம் உருவாக்கியுள்ளார்.

    Director P Santosh Interview

    இந்தத் தலைப்பும் சரி, அதன் டிசைனும் சரி... பார்த்த உடனே இது எந்த மாதிரிப் படம் என்று தெரிய வைத்துவிடும்.

    இந்தப் படம் வரும் மே 4 -ம் தேதி வெளியாகிறது. நிறைய தியேட்டர்களும் கிடைத்துள்ளன.

    படத்தின் இயக்குநர் சந்தோஷிடம் பேசினோம். ஹரஹர மஹாதேவகி படத்துக்கு இவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், தொடர்ந்து அதை விட மோசமான தலைப்புடன் அடுத்த படத்தை எடுத்தது ஏன்?

    "இது ஒரு ஜேனர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இப்படி படங்கள் வருகின்றன. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமேத் தெரியும். அப்படித்தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

    ஏன் அட்ல்ட் காமெடி வட்டத்திலேயே சுத்திக்கிட்டிருக்கீங்க?

    Director P Santosh Interview

    இது ஒன்றும் தவறு இல்லை. இதுவும் ஒரு பொழுதுபோக்குப் படம்தான். நகைச்சுவையுடன் கூடிய ஹாரர் படம். நீங்கள் நினைக்கிற அளவுக்கு கெட்ட படம் இல்லை. இளைஞர்கள் ரசிப்பார்கள்.

    என்ன சொல்லி நடிகர்களை இந்தக் கதையில் நடிக்க சம்மதிக்க வைத்தீர்கள்?

    தயாரிப்பாளர் என்னிடம் கதை கேட்கவில்லை. ஹீரோ, ஹீரோயின் யாருக்கும் நான் கதை சொல்லவில்லை. ஸ்பாட்டில் போய்தான் காட்சிகளைச் சொன்னேன். நான் சொன்ன பட்ஜெட்டிற்கு ஒப்புக்கொண்டு, எந்த வித தலையீடும் இல்லாமல், முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். அதனால் இருபத்தி மூன்று நாட்களுக்குள் படபிடிப்பை நடத்தி முடித்தோம்.

    இதே பாணியைத் தொடர்வீர்களா?

    அதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. அதே நேரம், வேறு ஜானரிலும் படம் பண்ணுவேன்.

    English summary
    Iruttu Araiyil Murattu Kuthu Director P Santosh Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X